புதிய கேப்டனை அறிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. சாம்சனும் ஆடுவார் என தகவல்.. காரணம் என்ன?

0
375
Sanju

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திடீரென புதிய கேப்டன் நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சஞ்சு சாம்சன் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். அதே சமயத்தில் இங்கிலாந்து டி20 தொடரில் அவருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயத்தின் தன்மை அவரை களத்தில் இருக்க விடாமல் செய்யும் அளவுக்கு மாறி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

முக்கிய முடிவெடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

தற்போது சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேன் ஆக பேட்டிங் செய்யக்கூடிய அளவில் இருக்கிறார். அதே சமயத்தில் விக்கெட் கீப்பராகவோ அல்லது ஃபீல்டராகவோ அவரால் களத்தில் செயல்பட முடியாது என்று தெரிகிறது. அவர் கைவிரலில் ஏற்பட்டிருந்த காயம் இன்னும் அந்த அளவிற்கு சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராகுல் டிராவிட் தலைமையிலான அணி நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் முதல் மூன்று போட்டிகளுக்கு புதிய கேப்டனை நியமிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே சமயத்தில் அந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சனையும் விளையாட வைக்க முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டன்

இந்த நிலையில் முதல் மூன்று போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன் அணியை கேப்டனாக வழிநடத்த முடியாத நிலையில் புதிய கேப்டனாக இளம் வீரர் ரியான் பராக் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் அசாம் மாநில அணியை கேப்டனாக மூன்று வடிவங்களிலும் வழி நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரை மூன்று போட்டிகளுக்கு கேப்டனாக அறிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தம்பி டெல்லி ஓரளவுக்கு மேல பொறுத்துக்காது.. அதனால எப்படியாவது தப்பிச்சிடு – கில்கிறிஸ்ட் அறிவுரை

இதை உறுதி செய்யும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அணி கூட்டத்தில் புதிய கேப்டனாக முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக்கை நியமிப்பது தொடர்பான நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று போட்டிகளில் இம்பாக்ட் பிளேயராக வருவார் என்று தெரிகிறது.

- Advertisement -