இந்திய கிரிக்கெட்

அவங்க பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுக்க.. பீட்டர்சன்னே அந்த ஐடியா குடுத்திருக்கார்.. விடமாட்டேன் – குல்தீப் யாதவ் பேச்சு

இங்கிலாந்தில் எந்த மனநிலையுடன் பந்து வீசினால் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தன்னிடம் விரிவாக பேசி இருப்பதாக குல்தீப் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மென்டராக இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். இதே அணியில் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருந்தார். எனவே இருவரும் சேர்ந்து வேலை செய்த காலகட்டத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து நிறைய பேசி இருப்பதாக கூறியிருக்கிறார்.

கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இணைந்து பணியாற்றிய இந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் என்ன மாதிரியான மனநிலையுடன் எப்படி பந்து வீச வேண்டும்? என்றும், பொதுவாக இங்கிலாந்துக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் என்ன மனநிலையுடன் வருகிறார்கள் என்பது குறித்தும் கெவின் பீட்டர்சன் குல்தீப் யாதவிடம் விளக்கமாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசும்பொழுது “கெவின் பீட்டர்சன் எங்கள் ஐபிஎல் அணியில் டெல்லியில் இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு அவர் எனக்கு நிறைய உள்ளீடுகளை வழங்கியிருக்கிறார். பீல்டிங் பொசிஷன் மற்றும் ஆடுகளம், பேட்ஸ்மேன்கள் குறித்து நிறைய கூறி இருக்கிறார். அவர் இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டை தாண்டி, அங்கு என்ன மாதிரியான மனநிலையுடன் செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்”

- Advertisement -

இதை மட்டும் செய்யக்கூடாது

“பொதுவாக இங்கிலாந்துக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தற்காப்பு மனநிலையில் வருவார்கள் என்று பீட்டர்சன் சொன்னார். பொதுவாக இங்கிலாந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் கைப்பற்றுவார்கள் என்றும், அவர்களுக்கு துணையாக தற்காப்பு பந்துவீச்சை சுழல் பந்துவீச்சாளர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறினார். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்றும் நான் தாக்குதல் மனநிலையுடன் களமிறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். எப்போதுமே பேட்ஸ்மேன் களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்”

இதையும் படிங்க : சிராஜ்க்கு ஸ்பெஷல் பயிற்சி.. கம்பீரின் மாற்று திட்டம்.. 2வது டெஸ்ட்டில் புது பவுலர்கள் – வெளியான தகவல்கள்

“எனக்கு பந்துவீச்சு தவிர வேறு எதுவும் தெரியாது. நீங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. மேலும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் நீங்கள் தகுதியானவர் என்று நான் நினைக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts