சிராஜ்க்கு ஸ்பெஷல் பயிற்சி.. கம்பீரின் மாற்று திட்டம்.. 2வது டெஸ்ட்டில் புது பவுலர்கள் – வெளியான தகவல்கள்

0
37
Siraj

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் முகமது சிராஜிக்கு ஒரு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு பிளேயிங் லெவனை மாற்றி அமைக்க கம்பீர் முயற்சி செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இருந்த சில பிரச்சனைகளில் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தது முக்கியமானதாக அமைந்தது. இந்திய அணி முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் கடைசி ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து சரிந்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சர்துல் தாக்கூர் இருந்த போதும் இந்திய அணி சரிந்தது. தற்போது அவரை வெளியில் வைத்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பவுலர்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. எனவே கீழ் வரிசை பேட்டிங் இன்னும் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது இதை சரி செய்ய கம்பீர் புதிய திட்டத்தை எடுத்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

சிராஜை வைத்து பிளான்

தற்போதைய இந்திய அணியின் பயிற்சி முகாமில் பவுலர் சிராஜ் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக அவர் பேட்டிங்கில் தற்காப்பு பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பும்ராவுக்கு முன்பாக அனுப்பப்பட்டு நிதீஷ் குமார் ரெட்டி மாதிரியான ஒரு பேட்ஸ்மேனுக்கு கம்பெனி தர ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கில் பாவம்பா சின்ன பையன்.. இந்த 2 விஷயத்தை பண்ணி உதவி பண்ணுங்க.. ப்ளீஸ் திட்டாதீங்க – அசாருதீன் வேண்டுகோள்

இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு புதிதாக பவுலர் ஒருவரைக் கொண்டு வருவது உறுதியான விஷயமாக தெரிகிறது. கம்பீர் தற்பொழுது சுதாரித்து புதிய திட்டங்களை உருவாக்கி இருக்கிறார் என்று செய்திகள் கூறுகிறது.

- Advertisement -