தென் ஆப்பிரிக்காவுடன் பந்தை பேசவைக்கும் குல்திப் யாதவ் ; வீடியோ இணைப்பு!

0
3086
Kuldeep yadav

ரோஹித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்ரிக்க அணியை வீழ்த்தி, தற்போது ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணி உடன் விளையாடி வருகிறது!

இந்த போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகர மைதானத்தில், மழையின் காரணமாக தாமதமாக 40 ஓவர் கொண்ட போட்டியாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் ருத்ராஜ், ரவி பிஷ்னோய் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்கம் தர,
ஜே மலான் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினார்கள். இந்த ஜோடியை 49 ரன்களில் ஷர்துல் தாகூர் பிரித்தார். இதற்கு அடுத்து வந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவையும் ஷர்துல் தாகூர் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார்.

இதற்கடுத்து களத்திற்கு வந்த தென்ஆப்பிரிக்க அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம்மை குல்தீப் யாதவ் மிக அழகாக தொடர்ந்து பந்துவீசி கிரீஸில் பின்னே தள்ளி, பிறகு புத்திசாலித்தனமாக பந்தை தூக்கி நெருக்கமாக ஸ்டம்புக்கு வீசி திருப்ப, எய்டன் மார்க்ரம் எளிதாக ஏமாந்து கிளீன் போல்ட் ஆனார். இந்த டெலிவரி மட்டுமல்லாது இந்த ஆட்டத்தில் மேலும் சில அருமையான டெலிவரிகளை குல்தீப் யாதவ் வீசி வருகிறார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சவுத் ஆப்பிரிக்கா அணி இருபத்தி ஏழு ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது!

இந்தப் போட்டியில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ், இசான் கிசான், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கிறார்கள். ஆல்-ரவுண்டராக சர்துல் தாகூர் இருக்கிறார். முகமது சிராஜ், ஆவேஸ் கான், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள்!

- Advertisement -