“குல்தீப் சாகல் தேவையில்லை.. இந்த 23 வயது புது வீரரே போதும்!” – முரளிதரன் அதிரடி பேச்சு!

0
806
Kuldeep

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது புதிய இந்திய டி20 அணியை உருவாக்குவதில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகிறது. இது எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்றால் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா விராட் கோலியை வெளியில் வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். இந்த காரணத்தினால் இவர்களை இந்திய டி20 அணியில் இருந்து உடனடியாக நீக்க முடியாத நிலைமையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இருவரும் இந்த விஷயத்தில் அவர்களே முடிவெடுக்கட்டும என்று விட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய டி20 அணிக்கு புதிய பேட்டிங் யூனிட்டை கொண்டு வரும் பொருட்டு ஜெய்ஸ்வால், ருத்ராஜ்,இசான் கிஷான், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் என அதிரடியாக எல்லா இளம் இந்திய திறமைகளையும் உள்ளே இறக்கி இருக்கிறது.

இதன் இன்னொரு பகுதியாக இந்திய டி20 அணியின் பௌலிங் யூனிட்டை கட்டமைக்கும் விதமாக, அர்ஸ்தீப், ஆவேஸ் கான், முகேஷ் குமார், அக்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னாய் என முயற்சி செய்கிறது.

தற்பொழுது இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழல் பந்துவீச்சு கூட்டணியாக இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்களால் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் பந்து வீச முடியுமா? என்று தெரியாது. ஆனால் அக்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் பவர் பிளேவில் பந்து வீசுவதால், பந்துவீச்சாளர்களை சுழற்றுவது கேப்டனுக்கு வசதியாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய சுழற் பந்துவீச்சுத் துறையைப் பற்றி பேசிய இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் “ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தியா ஒவ்வொரு நல்ல சுழற் பந்துவீச்சு அமைப்பைக் கொண்டிருக்கிறது. அனில் கும்ப்ளே ஆரம்பித்து தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் வரையிலும், மேலும் இப்போது வந்திருக்கும் இளம் சுழற் பந்துவீச்சாளர்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

ரவி பிஸ்னாய் எந்த லெக் ஸ்பின்னர்களில் இருந்தும் வித்தியாசமானவராக இருக்கிறார். அவர் பந்தை வேகமாக வீசுவதோடு, நல்ல ஸ்லைடு செய்து பேசுகிறார்.

இன்னொரு பக்கத்தில் அக்சர் படேலும் நல்ல முறையில் வீசுகிறார். அவர் பந்தை அதிகம் திருப்பக் கூடியவர் இல்லை என்றாலும் கூட, அவர் பந்தை துல்லியமாக வீசுவதில் வல்லவராக இருக்கிறார். அவரும் வேகமாக வீசுகிறார்.

என்ன மாதிரி பீல்டிங் அமைக்கப்படுகிறது அதற்கு தகுந்த மாதிரி பந்துவீச்சாளர் பந்து வீசுவது முக்கியம். எப்பொழுதும் ஒரு ஃபீல்டு செட்டப்பை வைத்து அதற்கு தகுந்தார் போல் பந்தை வீசுங்கள். அதே சமயத்தில் ஒரு பேட்ஸ்மேன் வலிமை எதுவென்றும் புரிந்து வைத்திருப்பது அவசியம்!” என்று கூறியிருக்கிறார்!