“நானும் அதிரடி பேட்ஸ்மேன் தான் என நிரூபித்த கே.எஸ்.பரத்” – இரண்டு பவுன்சர்களையும் சிக்ஸர்களாக மாற்றிய வீடியோ!

0
334

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வியாழக்கிழமை தொடங்கியது .

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 480 களுக்கு ஆல் அவுட் ஆனது அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி தற்போது தேநீர் இடைவேளை வரை 472 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 133 ரன்களுடனும் அச்சர் பட்டேல் 38 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

289 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழப்பிற்கு நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா இன்று காலையிலேயே ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாட் மர்பி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இவரும் விராட் கோலி இணைந்து நான்காவது விக்கெட் இருக்கு 64 ரன்கள் சேர்த்திருந்தனர். இவரைத் தொடர்ந்து விராட் கோலி உடன் இணைந்த கே.எஸ் பரத் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உணவு இடைவேளைக்கு பின்னான ஆட்டத்தில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பரத் 44 ரன்கள் எடுத்த நிலையில் லியான் பந்துவீச்சில் ஷாட் லெக் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரும் விராட் கோலியும் ஐந்தாவது விக்கெட்க்கு ஜோடியாக 84 ரன்கள் சேர்த்தனர். இவரைத் தொடர்ந்து விராட் கோலி உடன் இணைந்தார் அக்சர் பட்டேல் . இந்த ஜோடி இந்திய அணி வேகமாக ரன் குவிக்க உதவியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 28 வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

. இன்றைய போட்டியின் போது உணவு இடைவேளைக்குப் பின்பான ஆட்டத்தில் அதிரடியுடன் தொடங்கினார் கே எஸ் பரத். இன்று காலை நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக ஆடிய அவர் உணவு இடைவேளை முடிந்து வந்ததும் தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். கேமரூன் கிரீன் வீசிய ஒரு ஓவரின் மூன்று பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என தெறிக்க விட்டார் பரத்..

- Advertisement -

கேமரூன் கிரீன் வீசிய இரண்டு பவுன்சர் பந்துகளையும் புல் ஷாட் மூலம் அடுத்தடுத்து சிக்ஸ்க்கு விரட்டி ஆட்டத்தில் அதிரடியை ஏற்படுத்தினார். ஆனாலும் துரதிஷ்டவசமாக அவர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். 88 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்திருந்தார் அவர் கேமரூன் கிரீன் வீசிய பந்துகளில் சிக்ஸர் அடித்த வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.