டி20 உலக கோப்பையை வென்று தற்போது இந்திய அணியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு இந்த வெற்றி அவசியமான ஒன்றாக இருந்துள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக கடினமான சூழ்நிலையை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வந்துள்ளார்.
உலகக்கோப்பை வென்றதை மற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய வேளையில், ஹர்திக் பாண்டியா மட்டும் தனியாக மைதானத்தில் இருந்தது அனைவரையும் சற்று வருத்தப்பட வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ருணால் பாண்டியா ஹர்திக் பாண்டியா குறித்து சில உணர்ச்சி மிக கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது “நானும், ஹர்திக் பாண்டியாவும் தொழில் முறை கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. கடந்த சில நாட்களாக நாம் கண்டது ஒரு கனவு மாதிரி இருந்தது. ஒவ்வொரு நாட்டினரைப் போலவே நம் வீரர்களது வீரத்தின் மூலம் இதை உணர்ந்திருக்கிறேன். என் சகோதரன் எனது இதயத்தில் இருப்பதால் அதிகமாக உணர்ச்சிவசப்பட முடியவில்லை.
அவருக்கு கடந்த ஆறு மாதங்கள் மிகவும் கடினமாக இருந்துள்ளது. ஒரு சகோதரனாக நான் அவருக்காக மோசமாக உணர்ந்தேன். கூக்குரல் எழுப்புவது முதல் கேவலமாக பேசுவது வரை அனைத்தையும் செய்து நாளின் முடிவில் அவரும் ஒரு மனிதர் தான் என்பதை நாம் மறந்து விட்டோம். இது எப்படி இருந்தாலும் அவர் தனது சிறு புன்னகையின் மூலம் இவை அனைத்தையுமே கடந்து விட்டார். அந்த புன்னகை முகத்திற்காக அவர் எவ்வளவு வலிகளை தாங்கினார் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் இவை அனைத்தையும் கடந்து உலகக் கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தார். ஏனென்றால் அதுவே அவரது இறுதி நோக்கமாக இருந்தது. ஆறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருவதால் பாண்டியா இதை மட்டுமே நோக்கமாக வைத்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:மில்லர் அடித்த பந்து.. ரோகித்தை திரும்பி பார்க்கிறேன்.. இதனால கேட்ச் பிடிக்கிற ஐடியாவே இல்ல – சூரியகுமார் யாதவ் பேட்டி
ஹர்திக் பாண்டியா இவ்வளவு குறுகிய காலத்தில் இதை செய்தது நம்ப முடியாத ஒன்று என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு சமயத்திலும் மக்கள் அவரை புறக்கணித்துள்ளனர். ஆனால் இவை அனைத்துமே அவர் வலுவாக திரும்ப வழி வகுத்தது. பரோடாவில் இருந்து வந்த ஒரு சிறுவனுக்கு இதைவிட ஒரு பெரிய சாதனை எதுவுமே இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






