மில்லர் அடித்த பந்து.. ரோகித்தை திரும்பி பார்க்கிறேன்.. இதனால கேட்ச் பிடிக்கிற ஐடியாவே இல்ல – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
16740
Surya

இந்திய அணி நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்ற சூரியகுமார் யாதவ் டேவிட் மில்லர் அடித்த பந்தை பிடித்த கேட்ச் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்திய அணியினர் இந்திய பிரதமரை சந்தித்தபோது அந்த கேட்ச் குறித்து சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய பொழுது, வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி மன்னன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பல மீட்டர் பின்னோக்கி ஓடிச் சென்று கேப்டன் கபில் தேவ் பிடிப்பார். அந்த கேட்ச் தான் அன்று இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

இதே போல நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு டேவிட் மில்லர் அடித்த பந்தை எல்லைக்கோட்டில் சூரியகுமார் யாதவ் மிக லாவகமாக பிடித்த கேட்ச்தான் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த கேட்ச் குறித்து நிறைய சர்ச்சைகள் வெளியில் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரியகுமார் குறிப்பிட்ட அந்த கேட்ச்சை எப்படி பிடித்தார்? என்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய சூரியகுமார் யாதவ் அந்த நேரத்தில் பந்தை பிடிக்கின்ற எண்ணமே இல்லை என்கின்ற ஆச்சரியமான தகவலை கூறி இருக்கிறார்.

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” டேவிட் மில்லர் அடித்த அந்த பந்தை முதலில் எனக்கு கேட்ச் செய்ய வேண்டும் என்கின்ற ஐடியா இல்லை. ஏனென்றால் காற்று மிக வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. எனவே அந்தப் பந்தை எப்படியாவது தடுத்து ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்குள் மடக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்த நேரத்தில் திரும்பிப் பார்த்த பொழுது ரோகித் சர்மாவும் மிக தூரத்தில் இருந்தார். ஆனால் எப்படியோ அந்த பந்தை பிடித்த பிறகு சமாளித்து அதை கேட்ச் ஆக மாற்றி விட்டேன்

- Advertisement -

இதையும் படிங்க : எம்எல்சி 2024.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் முழு வீரர்கள் பட்டியல்.. சிஎஸ்கே அணியவே மிஞ்சும் பலம்

நான் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் அணிக்கு வேறு ஏதாவது வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் காரணமாக நான் பீல்டிங்கில் கடுமையாக உழைக்கிறேன். குறிப்பிட்ட வகையில் எல்லைக்கோட்டில் பந்தை பிடிப்பதற்கு நான் நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறேன். ஆனால் கடவுள் எனக்கு இதுபோன்ற ஒரு போட்டியில் இப்படியான ஒரு வாய்ப்பை கொடுப்பார்” என்று தெரியாது என்று கூறியிருக்கிறார்.