இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அணியில் தேவையில்லாமல் மாற்றங்களை செய்து கொண்டே இருக்கக் கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது வலுவில்லாத ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என இழந்திருக்கிறது. மேலும் கேப்டன் கில் பெரிய அளவில் மூன்று போட்டியிலும் ரன் எடுக்கவில்லை.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” கம்பீரின் பயிற்சியில் இந்திய அணியை இரண்டு உச்ச நிலைகளில் இருந்திருக்கிறது. மிகச் சிறப்பான ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இல்லை என்றால் மிக மோசமான ரிசல்ட் கிடைத்திருக்கிறது. எனக்கு மிக முக்கியமான காரணம் அவர் அவசரப்பட்டு அணியில் தேவையில்லாமல் மாற்றங்களை செய்து கொண்டே இருப்பதுதான்”
“இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமலே இந்திய அணி சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்தது. அதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தாலும் கூட நன்றாகவே இருந்தோம். இல் சிறப்பான முறையில் விளையாடி தன்னை நிரூபித்து இருந்தார்”
“இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய கில் இப்பொழுது தன் மீது தேவையில்லாமல் தானே அழுத்தத்தை கொடுத்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். மூன்றாவது போட்டியில் நல்ல முறையில் விளையாடினார். ஆனால் சிறப்பான பந்து ஒன்றில் ஆட்டம் இழந்து விட்டார். அவர் தற்போது அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு அவரிடம் வந்திருக்கிறது. அவர் ரோகித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக சேர்ந்து வேறு இருக்கிறார்”
இதையும் படிங்க : இப்ப விமானத்துல ரோகித் நிம்மதியா இருப்பார்.. அடுத்த மாசம் வேற மாதிரி கொண்டு வரேன் – அபிஷேக் நாயர் பேச்சு
“மற்றொரு பக்கம் ஜெய்ஸ்வால் ஏன் இன்னும் விளையாடாமல் இருக்கிறார்? என்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் கில்லுக்கு மிகுந்த அழுத்தத்தை ஒரு பக்கத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் சிறந்த வீரர் இதிலிருந்து எல்லாம் அவர் வெளியில் வருவார்” என்று கூறியிருக்கிறார்.