இப்ப விமானத்துல ரோகித் நிம்மதியா இருப்பார்.. அடுத்த மாசம் வேற மாதிரி கொண்டு வரேன் – அபிஷேக் நாயர் பேச்சு

0
251
Abhishek

தற்போது ரோகித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் சர்மா அடுத்த மாதம் அவர் எப்படி வருவார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தனது 33 வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார். மேலும் இறுதி வரை களத்தில் நின்று 125 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அபிஷேக் நாயரின் பயிற்சி

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். அதற்குப் பிறகு அபிஷேக் நாயர் உடன் இணைந்து உடல் எடை குறைப்பு மற்றும் பயிற்சியை ஆரம்பித்தார். 17 கிலோ உடல் எடையை அவர் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக குறைத்து இருந்தார்.

மேலும் ரன் எடுக்க விக்கெட்டுக்கு நடுவே ஓடும்பொழுது அவர் மிகவும் வசதியாக உணர்வதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். தற்போது அவரது உடல் தகுதி மிகச் சிறப்பாக இருப்பது அவருடைய பேட்டிங்கில் எதிரொலிக்கிறது.

- Advertisement -

அடுத்த மாதம் வேற மாதிரி…

இந்த நிலையில் 10 ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அடுத்த மாதம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் தொடர்ந்து ரோகித் சர்மா உடல் எடை குறைப்பை மேற்கொள்வார் என அபிஷேக் நாயர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி பற்றி இந்த ஒரு விஷயம் மட்டும் நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன் – டேவிட் வார்னர் பெருமிதம்

இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும் பொழுது “ரோகித் சர்மா இந்தியா திரும்பும் விமானத்தில் மிகவும் நிம்மதியாக இருப்பார். அவர் தனக்கு பிடித்த உணவை கைவிட்டார். அதன் பலன்கள் இன்னும் சிறப்பாக தெரிய வரும். மேலும் அடுத்த தொடர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தொடங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அவர் இன்னும் உடல் எடையை குறைத்து வந்தால், அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -