இந்திய கிரிக்கெட்

ஜடேஜா இப்ப இந்திய அணிக்கு தேவையா?.. அந்த இடத்துக்கு இந்த பையன் ரொம்ப சரியா இருப்பானே – ஸ்ரீகாந்த் கருத்து கருத்து

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் அணி தேர்வு தவறாக இருப்பதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறந்த தாக்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜா மற்றும் குல்திப் யாதவ் தாக்கத்தை உருவாக்க முடியாமல் திணறினார்கள். இந்திய அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.

இவரை சேர்க்க வேண்டும்

இந்திய ஒரு நாள் அணியின் திட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அக்சர் படேல் விளையாடினார். தொடர்ந்து ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அடுத்து அவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஒரு நாள் தொடர்களில் நீக்கப்பட்டு, ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டது புரியாததாகவே உள்ளது.

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” எனக்கு ஜடேஜா மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். ஆனால் தற்போது அவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியாதது போல உள்ளது. அவர் தாக்கி விளையாடுவதால் இல்லை பாதுகாத்து விளையாடுவதா என்று தெரியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் இந்த அணியில் அக்சர் படேல் இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையான உண்மையாக இருக்கிறது”

- Advertisement -

குறை வெளிப்பட்டு விட்டது

“ஒரு ஆல் ரவுண்டர் தேவை என்றால் அவர் நிச்சயமாக மிக வேகப்பந்து வீச்சு வீசக்கூடியவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று பாஸ்ட் பவுலர்கள் என இருக்கலாம். நேற்றைய போட்டியில் அக்சர் படேல் இல்லாத குறை வெளிப்படையாக தெரிந்தது”

இதையும் படிங்க : எங்க டீம் இந்த தப்ப சரி பண்ணியே ஆகணும்.. இதனாலதான் தோத்துகிட்டே இருக்கோம் – கேப்டன் கில் வருத்தம்

“அக்சர் படேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் நமக்காக அற்புதமாக விளையாடினார். அவர் ஒருநாள் அணியில் இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். எனவே அவரை கட்டாயமாக சேர்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts