நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு பேசி உள்ள இந்திய கேப்டன் சுப்பன் கில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கி இருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எந்த முறை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் பங்களிப்பு செய்ய முடியவில்லை. கேப்டன் சுப்மன் கில் அரைசதம் அடித்தார். ஒரு முனையில் தனியாக விளையாடிய கேஎல் ராகுல் 92 பந்தில் 112 ரன்கள் குவித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 284 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்தது.
இரண்டு விஷயம் நடக்கல
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டேரில் மிச்சல் அபாரமாக விளையாடி சதம் அடித்து 117 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணி 47 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது குறித்து பேசி உள்ள கேப்டன் சுப்மன் கில் கூறும் பொழுது “நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் கைப்பற்றவில்லை. ஐந்து பீல்டர்கள் உள்ளே இருக்கும் பொழுது நீங்கள் விக்கெட் கைப்பற்றாவிட்டால், இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்தால் கூட அதனால் பயன் கிடையாது. உங்களால் இலக்கை தடுக்க முடியாது”
இந்த விஷயத்தில் முன்னேறனும்
“இந்த ஆடுகளத்தில் ஒரு பேட்ஸ்மேன் செட்டில் ஆகிவிட்டால் ரன்கள் எடுக்க வேண்டும். ஏனென்றால் புதிதாக வரக்கூடியவர் உடனடியாக ரன்கள் எடுக்க முடியாது. இறுதியில் நாங்கள் ஒரு நல்ல டோட்டலை வைத்தோம். முதல் 10 ஓவர்களில் நன்றாகவும் பந்து வீசினோம். அதை வைத்து மிடில் ஓவர்களில் அவர்களுக்கு அழுத்தம் தர நினைத்தோம். அதை எங்களால் சரிவர செய்ய முடியாமல் போய்விட்டது”
இதையும் படிங்க : ஆயுஸ் பதோனி எதுக்கு?.. கம்பீர் தனக்கு வேண்டப்பட்ட ஆளை எடுக்கறாரு.. அக்சர் படேல் தப்பே பண்ணல – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“நாங்கள் கடந்த போட்டியில் கூட பீல்டிங்கில் இரண்டு வாய்ப்புகளை விட்டு விட்டோம். இந்த அணி நிச்சயம் இந்த விஷயத்தில் முன்னேற்றம் அடைந்து ஆக வேண்டும். நீங்கள் சிறப்பாக செயல்படுவது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இந்த வடிவத்தில் நீங்கள் தோல்வியடைவீர்கள்” என்று கூறி இருக்கிறார்.






