தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இன்னும் சாய் சுதர்சனுக்கு அவருடைய இடம் உறுதியாகவில்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் ரன்கள் எடுக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87 மற்றும் 39 ரன்கள் எடுத்து ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதத்தை தவறவிட்டார்.
இடம் உறுதியாகவில்லை
இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் தன்னுடைய இடத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பை வீணடித்து விட்டார் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “சாய் சுதர்ஷன் தன்னுடைய இடத்தை உறுதி செய்வதற்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும். அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நன்றாகவே விளையாடினார். குறிப்பாக பின் காலில் சிறப்பாக விளையாடினார். இதை வைத்து இன்னும் இரண்டு மூன்று தொடர்களில் இந்திய அணியில் அவருக்கு சுலபமாக இடம் கிடைத்துவிடும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவர் இவ்வளவு சுலபமாக தன்னுடைய முதல் சதத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது”
ஜெய்ஸ்வால் மிகச் சிறந்தவர்
“நீங்கள் சதம் எடுக்கும் பொழுது அது வேறு ஒரு நிலைக்கு சென்று விடுகிறது. நீங்கள் எடுக்கக்கூடிய 70, 80, 90 ரன்கள் என்பது கணக்கில் வராது. அது எப்பொழுதும் சாதாரண பட்டியலில் தங்கிவிடும். உங்களை தேர்ந்தெடுக்க கூடியவர்கள் எப்பொழுதும் சதங்களை மட்டுமே பார்ப்பார்கள்”
இதையும் படிங்க : ஆஸி தொடரில் விராட் ரோகித்துக்கு கம்பீர் வைத்த செக்.. உள்குத்து எச்சரிக்கை பேச்சு – என்ன நடக்கிறது?
“ஜெய்ஸ்வால் 100% மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தகுதியானவர். தற்போது அவருக்கு டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனைகள் இருக்கிறது. அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் பொழுது அதிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் அவருக்கு இன்னும் சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.






