இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் தோல்விக்கு இந்த வீரர்தான் முக்கிய காரணம்.. தம்பி ஜெய்ஸ்வால் இதை செய்பா – ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியை வென்று இருந்தது. இதனால் இரண்டாவது போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் என்று களம் இறங்கி 358 ரன் எடுத்தது. பெரிய அளவில் ரன் குவித்தோம். இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

ஜெய்ஸ்வால் தந்த சோதனை

இந்த தொடரில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் நேற்று மார்க்ரம் அரைசதம் அடித்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். அதை பயன்படுத்தி விளையாடிய அவர் சதம் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெல்வதற்கு காரணமாக இருந்தார்.

இதுகுறித்து பேசி உள்ள ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “மார்க்ரம் கொடுத்த கேட்ச் மிகவும் சுலபமான கேட்ச். அது கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் என்பதால் நிச்சயமாக ஜெய்ஸ்வால் அதை பிடித்திருக்க வேண்டும். உண்மையில் போட்டியில் அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. தோல்விக்கு முக்கிய காரணமாகவும் கேட்ச் வாய்ப்பை விட்டது அமைந்தது”

- Advertisement -

ஜெய்ஸ்வால் மாற்றிக்கொள்ள வேண்டும்

“ஜெய்ஸ்வால் அவுட் ஆகும் விதத்தை பார்க்கும் பொழுது அவர் பவுன்சர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். அவர் சிறப்பாக ஆரம்பித்தார் ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ருத்ராஜ் மிகவும் சிறப்பாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். ஜெய்ஸ்வால் நிச்சயம் மூன்று வடிவத்திலும் விளையாட வேண்டிய வீரர். அவர் விசாகப்பட்டினத்தில் தன் வாய்ப்பை பயன்படுத்துவார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : ஐபிஎல்-ல எனக்கு கேப்டனா ஆர்சிபி கிட்ட நடந்தது.. இந்திய அணிக்கும் அதுதான் நடக்குது – ருதுராஜ் பேட்டி

” பவுன்சரில் அவருக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. பவுன்சர் தாக்குதலுக்கு எல்லாருமே உள்ளாகிறார்கள். அந்த பந்தில் சிக்ஸர் அடிக்கவும் செய்கிறார்கள். எனவே இந்த பந்துக்கு ஜெய்ஸ்வால் எப்படி தன்னை சரி செய்து கொள்கிறார் என்பது தான் முக்கியமானது. அணியில் உள்ள ஆய்வாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்ல வேண்டும். ஜெய்ஸ்வால் பவுன்சரை கட்டுப்படுத்த போராடுகிறார். அதற்கு பதிலாக எப்படி விளையாட வேண்டும் என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by