தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிக சிறப்பாகவே பேட்டிங் செய்ததாகவும், டாஸ் ஒரு காரணியாக எல்லா நேரத்திலும் இருக்காது எனவும் ருதுராஜ் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் விராட் கோலி உடன் இணைந்து 156 பந்தில் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 83 பந்துகளை சந்தித்து 105 ரன்கள் ருதுராஜ் குவித்தார். இந்திய அணி 358 ரன்கள் எடுத்த பொழுதும் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.
கேப்டனாக எனக்கு நடந்தது
இதுகுறித்து ஒரு ருதுராஜ் பேசும் பொழுது “நான் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தபோது 13 போட்டிகளில் 11 டாஸ் தோற்று இருக்கிறேன். அதில் ஆர்சிபிக்கு எதிரான ஒரு போட்டியில் ஆடுகளத்தில் ஈரம் இருக்கும் சரியான நேரத்தில் நான் டாஸ் வென்றேன். ஆனால் அந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். எனவே டாஸ் கட்டுப்படுத்த முடியாத ஒரு காரணி கிடையாது”
“நேற்று நடந்தது ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது நமக்கு ஒரு பெரிய போட்டியில் நடக்கவில்லை. இப்படியான போட்டிகளில் நடந்து நமக்கு சவால் கிடைக்கும் பொழுது, நாம் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறி செல்ல முடியும்”
நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம்
“இந்த போட்டியில் நாங்கள் சில கட்டங்களில் நன்றாக பந்து வீசி இருக்கிறோம். முதல் பதினைந்து ஓவர்களில் நாங்கள் சிறப்பாக இருந்தோம். பிறகு பனிப்பொழிவு அதிக அளவில் வந்துவிட்டது. இதன் காரணமாக எங்களுடைய ஸ்பின்னர்கள் ஆட்டத்திற்கு வெளியில் இருக்கும் படி ஆகிவிட்டது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு பாராட்டுகள் சேரும்”
இதையும் படிங்க : ருதுராஜ் இன்னொரு விராட் கோலி.. இனிமே நீங்க அவரை ஒண்ணுமே பண்ண முடியாது – ஸ்ரீகாந்த் பேச்சு
“இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்து 350 ரன் எடுப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஈரப்பதம் இருந்தது. நாங்கள் நினைத்தபடி பந்து வரவில்லை. மேலும் 20 ஓவர்கள் தாண்டி ஆடுகளம் மெதுவாக மாறியது. நாங்கள் இதைத் தாண்டி சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறோம். 380 முதல் 400 ரன்கள் பற்றி பேசலாம். ஆனால் இந்த ஸ்கோர் இந்த ஆடுகளத்தில் சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.






