நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் அவரை பாராட்டி பேசியிருக்கிறார்.
கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவர்களை வீசிய ஜேமி ஓவர்டன் டிம் டேவிட்டுக்கு ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அந்த போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு அந்த ஓவர் முக்கிய காரணமாக இருந்தது.
அற்புதமான ஸ்பெல்
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றி அத்துடன் 18 ரன் மட்டுமே கொடுத்து அசத்தினார். மிடில் ஓவர்களில் இவர் விக்கெட் வீழ்த்திக் கொடுத்தது சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
மேலும் இந்த போட்டியில் அவர் யார்கர் வீசுவதற்கு முயற்சி செய்யவில்லை. மாறாக ஹார்ட் லென்த்தில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஸ்டெம்பை நோக்கி வீசிக்கொண்டு இருந்தார். இவரது வேகமும் துல்லியமும் இந்த முறை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அண்டர்டன் ஓவர்டன் ஆகிவிட்டார்
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “அவர் அற்புதமாக பந்து வீசினார். கடந்த ஐபிஎல் தொடரில் அண்டர்டன்னாக இருந்தவர் இந்த தொடரில் ஓவர்டன்னாக மாறிவிட்டார். அவர் தொடர்ந்து ஸ்டெப்ம்களை தாக்கினார் அதனால்தான் அவருக்கு விக்கெட் கிடைத்தது. சி எஸ் கே அன்னைக்கு ராஜஸ்தான் அணி உடனும் முதல் போட்டியில் அவர் ரன் எடுத்தார். டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு அவர் பெரிய அளவில் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை. ஆனால் அவர் பந்துவீச்சில் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்”
இதையும் படிங்க : தோனிக்கு கொஞ்சமும் சளைத்தவர் கிடையாது சஞ்சு.. நான் அந்த டீம்ல நேரடியா பல வருஷம் பார்த்தேன் – எரிக் சிம்மன்ஸ் பேச்சு
“டெல்லி அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன்கள் எடுக்காவிட்டால் மிகவும் கடினப்படுவார்கள். சமீர் ரிஸ்வி முதலில் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ரன்கள் எடுத்தால் தான் பிறகு அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது. மேலும் அக்சர் படேல் கீழ் வரிசையில் வந்து விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






