தோனிக்கு கொஞ்சமும் சளைத்தவர் கிடையாது சஞ்சு.. நான் அந்த டீம்ல நேரடியா பல வருஷம் பார்த்தேன் – எரிக் சிம்மன்ஸ் பேச்சு

0
32
Simmons

தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஒரு விஷயத்தில் தோனிக்கு கொஞ்சமும் சளைத்தவர் கிடையாது என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியிருக்கிறார்.

நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சஞ்சு சாம்சன் இறுதிவரை களத்தில் இருந்து சதம் அடித்து 56 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதமாக இது பதிவாகியது.

- Advertisement -

50 வினாடிகள் கூட்டம்

நேற்று போட்டியில் அடித்த சதத்தை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்க்கு அர்ப்பணிப்பதாக சஞ்சு சாம்சன் கூறியிருந்தால். காரணம் அவருடைய பணி மிகவும் சவால் ஆனது என்றும், அதற்காக அவருக்கு அர்ப்பணிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் சிஎஸ்கே அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த போதும் கூட, நான்காவது போட்டிக்கு முன்பாக வெறும் 50 வினாடிகள் மட்டுமே டீம் மீட்டிங் நடத்தப்பட்டது என்றும், அந்த அணி நிர்வாகத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள் என்றும் சஞ்சு சாம்சன் பேசியிருந்தார்.

- Advertisement -

சற்றும் சளைத்தவர் இல்லை

இது குறித்து எரிக் சிம்மன்ஸ் பேசும்போது “நான் சந்தித்த கிரிக்கெட் வீரர்களின் மிகவும் அமைதியானவரான தோனி உடன் பல ஆண்டுகள் இணைந்து சிஎஸ்கே அணியில் பயணித்திருக்கிறேன். சஞ்சு சாம்சனும் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் கிடையாது. அவர் தோனி போலவே ஆட்டத்தை மிகவும் அருமையான முறையில் புரிந்து கொள்கிறார்”

இதையும் படிங்க : நாங்க ஒரு விஷயத்தை தொடர்ந்து உள்ளுக்குள்ள பேசுறோம்.. கவனிச்சீங்களா இன்னைக்கு அந்த தப்பை செய்யல – ருதுராஜ் பேட்டி

“நான் அவரிடம் எந்த பதற்றத்தையும் விரக்தி உணர்வையும் காணவில்லை. சில நேரங்களில் ஆட்டம் அப்படித்தான் செல்லும். நீங்கள் உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அது அவரிடம் நிச்சயம் மிக அதிகமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -