இந்திய கிரிக்கெட்

இஷான் கிஷான் தன் இடத்துக்கு விளையாடல.. இந்திய அணி உலகத்துக்கே அந்த செய்திய சொல்லி இருக்கு – ஸ்ரீகாந்த் பாராட்டு

இந்திய டி20 அணியில் தன்னுடைய இடத்துக்காக இஷான் கிஷான் விளையாடவில்லை, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியதைப் போல சாதாரணமாக விளையாடினார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷான் அதிரடியாக 32 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அவருடைய அதிரடியால் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய பத்தாவது ஓவரிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்த அவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

அவர் இடத்திற்காக விளையாடவில்லை

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “இஷான் கிஷானுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் விளையாட ஆரம்பித்தபோது இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது ஒரு முக்கியமான போட்டி. இஷான் கிஷான் தன்னுடைய இடத்திற்காக விளையாடவில்லை. அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது போல சூரியகுமார் உடன் சேர்ந்து ஆடினார். இது ஐபிஎல் போட்டி போல இருந்தது”

“அவர் விளையாடிய ஷாட்டுகளில் எந்த ஆபத்தும் இல்லை. அபிஷேக் ஷர்மா கோல்டன் டக் ஆன நேரத்தில் அவர் இப்படி ஆன இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார். அபிஷேக் போனால் இஷான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரக்கூடிய சூரியகுமார், சிவம் துபே என எல்லோருமே சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடியவர்கள். இப்படி விளையாடினால் பந்துவீச்சாளர்களால் என்ன செய்ய முடியும்?”

- Advertisement -

சூரியகுமார் புத்திசாலித்தனம்

“சூரியகுமார் நேற்று மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார். இஷான் கிஷான் விளையாடும்போது அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இவர் பொறுமையாக இருந்தார். மேலும் இந்த சேசிங் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்கிறது. அது அபிஷேக் ரன் அடிக்காமல், பும்ரா மற்றும் அக்சர் படேல் இல்லாமல் எங்களால் வெல்ல முடியும் என்று சொல்லி இருக்கிறது”

இதையும் படிங்க : பாக் இலங்கை பங்களா ஆப்கான்.. 4 அணிகள் செய்ததை தனியாக செய்த இந்திய அணி – அசத்தல் ரிப்போர்ட்

“மூன்றாவது ஓவரில் புதிய பவுலரை கொண்டு வந்தது தான் நியூசிலாந்து அணி தோற்பதற்கான முதல் முக்கிய புள்ளியாக இருந்தது. தன்னுடைய முதல் ஓவரில் விக்கெட் கைப்பற்றிய மேட் ஹென்றியை தொடர்ந்து மூன்றாவது ஓவரும் வீச வைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஒரே ஒரு உடன் நிறுத்தி புதிய பவுலரை கொண்டு வந்து 24 ரன்கள் கொடுத்தார்கள். இந்த இடத்தில் செய்தது பெரிய தவறு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts