பாக் இலங்கை பங்களா ஆப்கான்.. 4 அணிகள் செய்ததை தனியாக செய்த இந்திய அணி – அசத்தல் ரிப்போர்ட்

0
58
ICT

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் மற்றும் ஆப்கான் அணிகள் சேர்ந்து செய்த ஒரு விஷயத்தை இந்திய அணி தனியாக செய்து அசத்தியிருக்கிறது.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்ற முடிந்திருக்கும் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி 200 ரன்கள் தாண்டி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மா வைத்த புள்ளி

இந்திய அணி 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த காலகட்டத்தில் இந்திய டி20 அணியில் பேட்டிங் இன்டெண்ட் என்பது எல்லோருக்கும் இருக்காது. எல்லோரும் தங்களை கொஞ்சம் செட் செய்து கொண்டு இறுதியில் அடித்து விளையாடுவதுதான் வழக்கம்.

இந்த நிலையில் அந்த உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி கேப்டன் ரோகித் சர்மாவை முழுதாக மாற்றியது. டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதல் கடைசி வரை அடித்து விளையாடுவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என ரோகித் சர்மா புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். அங்கிருந்து இந்திய டி20 கிரிக்கெட் அணுகுமுறையில் பெரிய ஏற்பட்டது. தற்போது கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் இந்த காலகட்டத்தில் அது உச்சத்தை எட்டி இருக்கிறது.

- Advertisement -

தனியாக சாதித்த இந்திய அணி

தற்போது சர்வதேச t20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் மற்றும் ஆப்கான் அணிகள் 4 சேர்ந்து ஒட்டுமொத்தமாக 45 முறை 200க்கும் மேற்பட்ட ரண்களை எடுத்து இருக்கின்றன. இந்த ஆசிய கிரிக்கெட் நாடுகள் 4 சேர்ந்து செய்த இதை இந்திய அணி தனியாக செய்து சாதித்து இருக்கிறது.

இதையும் படிங்க : இஷான் செஞ்ச அத வேற யாரும் செஞ்சு பாக்கல.. ஆனாலும் அவர் மேல எனக்கு கோபம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

நேற்று இந்திய அணி 200 ரன்கள் தாண்டி எடுத்தபொழுது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 45 ஆவது முறையாக 200 ரன்கள் தாண்டி எடுத்தது. இதன் மூலம் மற்ற பெரிய ஆசிய கிரிக்கெட் நாடுகள் 4 சேர்ந்து செய்ததை இந்திய அணி தனியாக செய்து அசத்தியிருக்கிறது. இது தற்போது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கான சாட்சி!

- Advertisement -