தற்போதைய பாகிஸ்தான் அணி பேட் மற்றும் பந்துவீச்சில் மிகவும் சராசரியான ஒரு அணி என இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பயிற்சி முறையையும் விமர்சித்து பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் ஆவரேஜ் டீம்
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” பாகிஸ்தான் டீம் சராசரிக்கும் குறைவான டீம். ஷாகின் அப்ரிடி கூட பெரிய பவுலர் கிடையாது. ஓமன் அணியை வெகு எளிதாக ஜெயித்தார்கள். ஆனால் அந்த ஓமன் அணி 35 வயது உடைய அங்கிள்கள் அணி. இப்போது நான் கூட அந்த அணிக்கு கேப்டன் ஆக முடியும். அந்த அணிக்கு எதிராகத்தான் இவர்கள் பந்துவீச்சு நன்றாக இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக எப்படி இருக்கிறது? என்று பார்க்க வேண்டும்”
“முகமது ஹாரிஸ் நேற்று ரன் அடித்தார். ஆனால் அவர் ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசைகளில் அடிக்கிறார். இவருக்கு வருண் சக்கரவர்த்தி பந்து வீசினால் ஒரு பந்தில் சிக்சர் அடித்து விட்டு அடுத்த பந்தை வானத்தில் தூக்கி அடித்து அவுட் ஆகிவிடுவார். அடுத்து பகார் ஜமானுக்கு குல்தீப் யாதவ் இருக்கிறார். அதே இந்திய பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பாக இருக்கிறது”
இவர் ஆர்சிபி முன்னாள் கோச்
“இப்போதைய பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் மிகவும் தைரியமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார். இவர் ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் எந்த வெற்றியும் பெறவில்லை”
இதையும் படிங்க : இந்தியா B டீம் கூட பாகிஸ்தான் அணியை சும்மா ஜெயிக்கும்.. புது ராஜாக்கள் வந்துட்டாங்க – இந்திய முன்னாள் வீரர் கருத்து
“இப்படிப்பட்டவர் பயிற்சியில் பாகிஸ்தான் மட்டும் எப்படி வெற்றி பெறும்? அவர் தைரியமாக பேட்டை வீசச் சொல்லி வீரர்களிடம் சொல்லி இருப்பார். நேற்று அயூப் அப்படித்தான் அவுட் ஆனார். இது பயிற்சியாளரின் தாக்கம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்” என விமர்சனம் செய்திருக்கிறார்.






