நேத்து ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்க கம்பீர்தான் காரணம்.. இந்த மாற்றம் கட்டாயம் வேணும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
369
Kuldeep

இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முக்கியமான ஒரு மாற்றத்தை செய்யவில்லை என்றால் ஜெயிக்க முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்துவிட்டது. நிலையில் நாளை மூன்றாவது போட்டியில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்திய அணி தைரியமாக மாற்றங்களை செய்யலாம்.

- Advertisement -

இவர் கட்டாயம் ஆடணும்

இந்த நிலையில் கம்பீர் தொடர்ந்து எட்டு பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதால் குல்தீப் யாதவை வெளியில் வைத்து வருவது இந்திய அணிக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது. அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தால் தொடரையே வென்று இருக்கலாம் என்று அப்போதே விமர்சனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “குல்தீப் யாதவ் நிதீஷ்குமார் ரெட்டி இடத்தில் விளையாட வேண்டும். இல்லை எதற்காக வேறு யாரையாவது நீக்குவார்களா என்று தெரியாது. ஆனால் இதை செய்தாக வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டி திறமையற்ற பந்துவீச்சை வைத்துக் கொண்டு தாங்க முடியாது. அவர் சீக்கிரத்தில் நொறுங்கி விடுவார். இதே போல பேட்டிங்கிலும் அவர் சில பந்துகள் இருக்கும் போதே வருகிறார்”

- Advertisement -

ஜெயிக்க வேண்டிய போட்டி

“தேவைப்பட்டால் ஹர்ஷித் ராணாவை எட்டாவது இடத்தில் விளையாட வைக்கலாம். நேற்று அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு பிடித்திருந்தது. எனவே இதை யோசித்து நிதீஷ் குமார் ரெட்டியை கழட்டி விடுங்கள். ஹர்ஷித் ராணா இரண்டு விக்கெட் எடுத்திருப்பதால் அவரை நீக்க முடியாது”

இதையும் படிங்க : 2 டக்.. பின்னணியில் விராட் கோலிக்கு 2 பிரச்சனைகள்.. டிராவிட்டுக்கும் கடைசியில் இதுதான் நடந்தது

“நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தால் எளிதாக போட்டியை வென்றிருக்கலாம். ஆஸ்திரேலியர்களுக்கு சுழல் பந்துவீச்சை விளையாட எந்த க்ளுவும் இல்லை. நேற்று வெல்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு இருந்தது. ஐந்து விக்கெட்டுகளை அவர்கள் இழந்த பொழுது தொடர்ந்து சுழல் பந்துவீச்சை பயன்படுத்தி இருந்தால் விஷயம் மாறி இருக்கும். குல்தீப் யாதவை விளையாடாததின் காரணம் எனக்கு புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -