கேப்டன் பதவி.. விராட் கோலி 4வது இடம்.. 2ம் இவர்கிட்ட கொடுங்க.. கில்லுக்கு தகுதி இல்ல – ஸ்ரீகாந்த் பேட்டி

0
947
Srikanth

தற்போது இந்திய டெஸ்ட் அனுப்பி புதிய கேப்டன் மற்றும் விராட் கோலியின் நான்காவது இடத்தில் யார் வரவேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய வீரரை பரிந்துரை செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால், இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு எப்படியான அணியை அனுப்புவது என்கின்ற பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டுக்கும் காத்திருக்கும் வீரர்கள்

தற்போது கேப்டன் பொறுப்புக்கு பும்ரா, கில், கேஎல் ராகுல் ரிஷப் பண்ட் ஆகியோர் காத்திருக்கிறார்கள். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடத்திற்கு சாய் சுதர்சன், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், படிக்கல், ருதுராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “கில் உறுதியாக டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் விளையாடுவார் என்பது கூட உறுதியானது கிடையாது. கேப்டன் பதவி பும்ராவுக்கு கொடுக்கப்பட வேண்டும். மேலும் அவர் பிட்டாக இல்லை போட்டிக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இருக்க வேண்டும்”

- Advertisement -

விராட் கோலியின் இடம் இவருக்குத்தான்

“என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் இடம் கேஎல் ராகுலுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு மிக முக்கியமான வீரராக அந்த இடத்தில் செயல்படும் தகுதியுடன் இருக்கிறார். இந்த இடத்தில் விளையாடுவதற்கான டெக்னிக் அவரிடம் இருக்கிறது. அணி நிர்வாகம் அவருக்கான பங்கை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : அடுத்த கேப்டன் பும்ரா கில்.. ஆனா உங்க பிசிசிஐ விருப்பமே வேற.. எங்க மண்ணுல சவால் இருக்கு – மொயின் அலி பேச்சு

“கேஎல்.ராகுல் இனி இளைஞராக இருக்க முடியாதவர். எனவே அவரால் விராட் கோலியின் இடத்தை நிரப்ப முடியும். அவர் பேட்டிங் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர். அவரால் இரண்டு வழிகளிலும் பேட்டிங் செய்ய முடியும். ஆரம்பத்தில் இரண்டு விக்கெட் சீக்கிரம் விழுந்தால் அவர் உள்ளே வந்து பொறுமையாகவும் விளையாட முடியும். தேவைப்படும் பொழுது அடித்து ரன் ரேட்டை உயர்த்தவும் முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -