அடுத்த கேப்டன் பும்ரா கில்.. ஆனா உங்க பிசிசிஐ விருப்பமே வேற.. எங்க மண்ணுல சவால் இருக்கு – மொயின் அலி பேச்சு

0
174
Moeen

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் யாரை விரும்புகிறது என்பது குறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி மிகவும் முக்கியமான கருத்தை கூறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட செல்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் விளையாட மாட்டார்கள்.

- Advertisement -

புதிய இரண்டு தலைவலிகள்

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடங்களுக்கு வீரர்களை கொண்டு வருவது மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இருக்கும் சவால் கிடையாது. புதிய கேப்டனையும் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே தற்போது இந்தியத் தேர்வுக்குழுவுக்கு இரண்டு புதிய தலைவலிகள் ஏற்பட்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வருவதற்கு பும்ரா, கில், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள். இரண்டு வருடத்திற்கான இடைக்கால கேப்டனை கொண்டு வருவதா? அல்லது நீண்ட வருடத்திற்கு தேவையான நிரந்தர கேப்டனை உருவாக்குவதா? என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடுமாறி வருகிறது.

- Advertisement -

கில்லின் பிரச்சனை இதுதான்

இதுகுறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேசும் பொழுது ” தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு புதிய கேப்டன் கொண்டு வரப்படலாம் என்றால் அது கில் ஆக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் பும்ராவை கேப்டனாக நியமிப்பதற்கு பிசிசிஐ விரும்புகிறது. அவர் ஒரு நல்ல கேப்டன் மற்றும் தலைவர். ஆனால் அவர் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவர் முழு தொடருக்கும் கேப்டனாக இல்லாமல் போகலாம்”

இதையும் படிங்க : ஐபிஎல் ஒன்றாக ஆடிய போது.. இந்த டெக்னிக் சொல்லி தரீங்களானு விராட் கோலி கேட்டாரு – தென் ஆப்பிரிக்கா மார்க் பவுச்சர்

“எனவே இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரளவுக்கு கண்ணியமான முறையில் விளையாடியிருக்கும் ஒருவருக்கு புதிய கேப்டன் பொறுப்பை கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். கில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக குஜராத் அணியை ஓரளவுக்கு நன்றாகவே நடத்தி வருகிறார். ஆனால் அவர் மிகவும் சிறந்த கேப்டன் கிடையாது. அதே சமயத்தில் அவருக்கு கிரிக்கெட் மூளை இருக்கிறது. இருந்த போதிலும் இங்கிலாந்து சூழ்நிலை அவருக்கு கடினமானதாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -