பழைய தோனி இல்ல .. அந்த ஒரு விஷயத்தால இது புது தோனி.. நேற்று சிஎஸ்கேதான் ஜெயிச்சது – ஸ்ரீகாந்த் பேட்டி

0
176
Dhoni

நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிஎஸ்கே அணியை வென்றது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தாலும் கூட அந்த அணியின் ரசிகர்கள் வெற்றி பெற்றவர்களை விட அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். காரணம் நேற்று களம் இறங்கிய தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் ஆட்டம் இழக்காமல் அடித்ததுதான்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு பவர் பிளேவில் ரன்கள் வரவில்லை. இது அப்படியே அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தமாக மாறி அந்த அணி பேட்டிங் யூனிட் சரிந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் வந்த தோனி ரன் ரேட்டை காப்பாற்றி பதினாறு பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இன்று இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த செய்தியே ஆக்கிரமித்து இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” இதை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. தோனியின் ரசிகனாக நான் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 42 வயதில் வந்து ஒருவர் இப்படி அடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதேபோல விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான நாக் விளையாடினார். அவருடைய முதல் சர்வதேச போட்டியில் டக் அவுட் ஆன அவர் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார்.

அவர் பாயிண்டில் சிக்ஸர் அடிக்கிறார். ஒரு கையால் மிட் விக்கெட் ஸ்டாண்டில் சிக்சர் அடிக்கிறார். இப்படி அவர் எல்லா இடங்களிலும் அடிக்கிறார். மொத்தமாக டெல்லி பந்துவீச்சு தாக்குதலை கிழித்தெறிந்து விட்டார். முன்பு பாயிண்ட் திசையில் அடிப்பார். ஆனால் இப்பொழுது கவர் திசையில் சாய்ந்தபடி அவர் அடித்த ஒரு சிக்சர் மிகவும் புதுமையானது.

நியாயப்படி எடுத்துக் கொண்டால் நேற்று எல்லா வகையிலும் சிறப்பாக பந்து வீசியது. ஆனால்தோனியின் பேட்டிங் பரபரப்பாக இருந்தது. உண்மையில் சிஎஸ்கே தோல்வி அடைந்து விட்டதுதான். ஆனால் அனைவருமே தோனியின் பேட்டிங்கை பார்க்க காத்திருந்த காரணத்தினால், நேற்று அவர் விளையாடிய விதத்தில் தார்மீகமாக சிஎஸ்கே அணிக்குதான் வெற்றி கிடைத்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி அடித்தும் சிஎஸ்கே தோல்வி.. வைரலாகும் அவரின் 10 வருட பழைய ட்வீட்.. ரசிகர்கள் உற்சாகம்

கீப்பிங்கை பொறுத்த வரை அவர் இன்னும் இந்தியாவின் நம்பர் ஒன் கீப்பர். இரண்டாவது இடத்தில் சகா இருக்கிறார். இவர்கள் இருவரும் இன்னும் தங்களுடைய வேலைகளை கீப்பராக சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். தோனியை எடுத்துக் கொண்டால் கீப்பராக சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இன்னும் மிகச் சிறப்பாக இருக்கிறார். மேலும் நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட்டுக்கு இடையே நன்றாக ஓடுகிறார். அவருக்கு 42 வயது என்று சொன்னால் நம்ப முடியவில்லை. அவர்இன்னும் இரண்டு வருடம் ஐபிஎல் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.