டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியடைந்து விடுவோம் என்றே பாகிஸ்தான் அணி இந்தியா அணிக்கு எதிராக விளையாட மறுக்கிறது என ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் டி20 உலகக் கோப்பை தொடரில் தங்கள் அணி பங்கேற்கும் எனவும் ஆனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடாது எனவும் அறிவித்திருக்கிறது. இது இப்போது பெரிய சர்ச்சையை உண்டாக்கி கொண்டு இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாது என பாகிஸ்தான் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் அதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
அதே சமயத்தில் ஐசிசி தற்பொழுது ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியை டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றவும், மேலும் அவர்களுடன் யாரும் கிரிக்கெட் விளையாட முடியாத படி தடை விதிக்கவும் யோசித்து வருவதாகவும் செய்திகள் கூறுகிறது. பாகிஸ்தான் விளையாடாவிட்டால் பெரிய இழப்புகளை சந்திக்க இருப்பது உறுதியானது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். அவர் பேசும்போது “காலியான குடம்தான் அதிகம் சத்தம் போடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயந்து போய் இருக்கிறது. அவர்கள் இப்பொழுது அண்டர் 19 கிரிக்கெட்டில் கூட நம்மிடம் தோற்று விட்டார்கள். அதனால்தான் வாக் ஓவர் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்”
இதையும் படிங்க : 128 ரன்.. ஒரு ஓவரில் 3 விக்கெட்.. சொந்த மண்ணில் இலங்கைக்கு நடந்த ஒயிட் வாஷ்.. இங்கிலாந்து அபார வெற்றி
“அவர்கள் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் இந்திய அணிக்கு அது வாக் ஓவர் போட்டிதான். அவர்கள் வந்தாலோ வராவிட்டாலோ அதில் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை. ஆசிய கோப்பையில் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான எல்லா போட்டியையும் ஆடி தோற்று விட்டுதான் போனார்கள்” என்று கூறியிருக்கிறார்.