இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசி வந்தார். இந்த நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த தொடரை இழந்தது. தற்போது இந்தத் தொடரில் வீரர் ஒருவர் சரியான செயல்பாடு இல்லாவிட்டாலும் மற்ற வீரர்களிடம் வம்பு இழுத்ததாக ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வந்த பொழுதே, மழை ஏதும் இருக்காவிட்டால் இந்திய அணி இரண்டு தொடரையும் மொத்தமாக கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டது.
மேலும் டி20 தொடரில் ஒரு போட்டியை இந்திய அணி தோர்ப்பதற்கு வாய்ப்புகள் இருந்தால் கூட, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி கேஎல்.ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட் தொடரை மொத்தமாகவே கைப்பற்றி விடும் எனதான் பலரும் நினைத்திருந்தார்கள்.
இப்படியான நிலையில் 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை பலவீனமான ஒரு இலங்கை அணியிடம் இழந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் ஸ்ரீகாந்த் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குறித்து மிக கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “முகமது சிராஜ் களத்தில் காட்டும் ஆக்ரோஷம் சரியானதாக இல்லை. அப்படியான ஆக்ரோஷம் இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அவருடையது ஆக்டிங் அக்ரஷன். அவருடைய ஆக்ரோஷம் என்பது ஒரு நடிப்பு. இதோ தன் பந்தில் பயங்கரமாக நடந்து கொண்டிருப்பது போல, அவர் எதிரணி வீரர்களிடம் மோதிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : எங்க வீராங்கனை ஒலிம்பிக்ல அந்த தப்பு பண்ணல.. வெள்ளி பதக்கம் கட்டாயம் கொடுக்கணும் – சச்சின் கோரிக்கை
முகமது சிராஜிடம் எந்த சரக்கும் இல்லை. கடந்த வருடம் ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிப் போட்டியில் மட்டுமே குறிப்பிடும்படி ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். அதற்குப் பிறகு நடந்த உலகக் கோப்பையில் எதையுமே செய்யவில்லை. டி20 உலகக் கோப்பையிலும் பெரிதாக விக்கெட்டுகள் எடுக்கவில்லை. அதே உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற பும்ரா எவ்வளவு அமைதியாக இருக்கிறார். ஆனால் சிராஜ் ஏதோ ஹீரோ போல தேவையில்லாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.