எங்க வீராங்கனை ஒலிம்பிக்ல அந்த தப்பு பண்ணல.. வெள்ளி பதக்கம் கட்டாயம் கொடுக்கணும் – சச்சின் கோரிக்கை

0
250
Sachin

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 50 கிலோவுக்கு உட்பட்ட பிரிவுக்கான பெண்கள் மல்யுத்தத்தில் இறுதிப் பிரிவுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுது அவருக்கு ஆதரவாக இந்திய நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வினேஷ் போகட் அரையிறுதி வரையில் விதிகளுக்கு உட்பட்டு தனக்கு எதிராக மோதியவர்களை வென்று இருக்கிறார். இறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் 50 கிலோவுக்கும் மேல் 100 கிராம் அதிகமாக உடல் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு எந்தவிதமான பதக்கமும் வழங்கப்படாது என்றும், மேலும் அவர் தரவரிசையில் கடைசி இடத்துக்கு தள்ளப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி இருக்கும் பொழுது அரையிறுதி வரையில் அவர் சரியான முறையிலேயே சென்று வென்று இருப்பதால் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர், மேலும் அவரை தரவரிசையில் கடைசி இடத்திற்கு தள்ளக் கூடாது என பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது அறிக்கையில் கூறும் பொழுது “ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் இருக்கின்றன. ஆனால் விதிகளை அமல்படுத்தும் போது சூழ்நிலைகளையும் பார்க்க வேண்டும். வினேஷ் இறுதிப் போட்டிக்கு மிக நியாயமான முறையில் நேரடியாக தகுதி பெற்றிருக்கிறார். எடையின் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இறுதிப் போட்டிக்கு முன்பாகத்தான். அவருக்கு தகுதியான வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டிருப்பது தர்க்கத்தையும் விளையாட்டு உணர்வையும் மீறக் கூடியதாக இருக்கிறது.

செயல் திறனை மேம்படுத்தும் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி இப்படியான தடையை விதித்திருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படியானால் எந்த பதக்கத்தையும் வழங்காமல் கடைசி இடத்தில் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் வினேஷ் தனக்கு எதிராக மோதியவர்களை நியாயமான முறையில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார். அவர் நிச்சயம் வெள்ளி பதக்கத்திற்கு தகுதியானவர்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கிடையாது.. அகர்கர் செலக்ட் பண்ணாத அவர்தான் ஸ்பின்ல பெஸ்ட் பேட்ஸ்மேன் – சல்மான் பட் கருத்து

விளையாட்டு நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கும் இந்த வேளையில், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நாம் நம்புவோம். மேலும் அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.