இந்திய அணி இன்று நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று தனது முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பார்படாஸ் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கிரிஸ் ஸ்ரீகாந்த் இரண்டு முக்கியமான அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
இந்திய அணி தனது போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் காலையில் விளையாடுகிறது. இதன் காரணமாக ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்யும் என்று இந்திய அணி நிர்வாகம் நம்புகிறது. இதன் காரணமாகவே இந்திய தேர்வுக்குழு நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்திருந்தது.
இதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணியில் உலக தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணிக்கு இருக்கும் சாதகம் அப்படியே ஆப்கானிஸ்தான் அணிக்கும் இருக்கிறது. எனவே இந்தப் போட்டியை சாதாரணமாக இந்தியா எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தப் போட்டியில் இருக்கும் சவால்கள் பற்றியும், இந்த போட்டியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் மற்றும் டாஸ் என்றால் எடுக்கவேண்டிய முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் முக்கியமான இரண்டு அறிவுரைகளை இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” தற்போது டி20 உலக கோப்பை தொடரில் எடுத்துக் கொண்டால் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு ஆதில் ரஷீத், ஆப்கானிஸ்தானுக்கு ரஷீத் கான், தென் ஆப்பிரிக்காவுக்கு ஷம்சி போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். எனவே நிச்சயமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : ப்ளீஸ் விராட் கோலிய முடிச்சு விட்டுறாதிங்க.. அவருக்காக இத மட்டும் செய்யுங்க – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் தரமான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பேட்டிங்தான் பலவீனமாக இருக்கிறது. எனவே ரோகித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானை முதலில் பேட்டிங் செய்துவிட்டால் அவர்கள் 150 முதல் 160 ரன்கள் சேசிங் பிரஷர் இல்லாமல் எடுப்பார்கள். பிறகு தங்களது வலிமையான பந்துவீச்சை வைத்து இந்தியாவுக்கு தொந்தரவு தருவார்கள். இப்படி நடந்தால் ஆப்கான் அணியிடம் இந்தியா தோற்று விடும்” என்று கூறியிருக்கிறார்.