தோனியை வைத்து படம் இயக்கவுள்ள விக்னேஷ் ஷிவன் ? சமூக வலைத்தளத்தில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு

0
61
MS Dhoni and Vignesh Shivan

மகேந்திர சிங் தோனிக்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அவருடைய ரசிகர்கள் கட்டுக்கடங்காத அளவில் இருப்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் அவருக்கு ரசிகர்கள் வெகுவாக உள்ளனர்.

தமிழகத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேந்திர சிங் தோனிக்கும் இருக்கின்றது. சூர்யா உட்பட பல முன்னணி கதாநாயகர்கள் அவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வெங்கட்பிரபு விக்னேஷ் சிவன் உட்பட பல இயக்குனர்களும் அவருக்கு ரசிகராக இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மகேந்திர சிங் தோனியை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன்

போடா போடி தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்கிற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். ஏப்ரல் மாதம் அந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் விக்னேஷ் சமிபத்தில் மகேந்திர சிங் தோனியை இயக்கியிருக்கிறார். மகேந்திர சிங் தோனி வைத்து விளம்பரம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். இறுவரும் இணைந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “என் ரோல் மாடல், என் ஹீரோவை நான் நேரடியாக சந்தித்து விட்டேன். இந்த தருணத்தை என் வாழ்வில் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன். அவரை நாம் சந்தித்துப் பேசியது மற்றும் அவருக்கு எதிராக ஆக்ஷன் என்று சொல்லி அவரை நான் இயக்கியது கனவு போல் உள்ளது. கூடிய விரைவில் நான் இயக்கிய அந்த விளம்பர படம் வெளியாகும் அதை பார்க்க தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இன்னொரு பதிவில் அவர் மகேந்திர சிங் தோனியிடம் தான் இருந்த 10 நிமிடங்கள் குறித்து உற்சாகமாக கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் உடைய தாயார் காவல் அதிகாரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு சமயத்தில் ஐபிஎல் வீரர்களுக்கு அவர் காவல் அதிகாரியாக இருந்து இருக்கிறார். அந்த சமயத்தில் அவரது தாயார் மகேந்திரசிங் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் விக்னேஷ் சிவன் ஆனால் மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க முடியாமல் போனதாகவும், அது தற்போது கடவுளின் அருளால் நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது தாயார் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை அவர் எம்எஸ் தோனி இடம் காண்பித்து நினைவை பரிமாறிக் கொண்டதாக கூறி உள்ளார்.

இறுதியாக முப்பத்தி ஆறு முறை அவரிடம் நான் ஆக்ஷன் என்று சொன்னேன். அவரும் மிகப் பொறுமையாக,மிக எளிதாக நடந்து கொண்டார். இந்த பத்து நிமிடத்தை என்னுடைய வாழ்நாளில் நான் மறந்துவிட மாட்டேன் இவை அனைத்தையும் சாத்தியப்படுத்திய கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி என்று வினேஷ் ஷிவன் உணர்ச்சி பொங்க தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்