18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் போட்டிக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கேகேஆர் அணியின் முக்கிய வீரர்
கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சில் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்படும் வருண் சக்கரவர்த்தி ஐந்து வருடமாக கேகேஆர் அணியில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இவரது அபார செயல்பாட்டின் மூலமாக இந்திய டி20 அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்தது.
மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக மாறினார். இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணி குறித்தும் சுனில் நரேன் குறித்தும் சில முக்கிய விஷயங்கள் வருண் சக்கரவர்த்தி பேசியிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தேவையான விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும், இருப்பினும் ஏதாவது சந்தேகம் என்றால் அவரிடம் தாராளமாக சென்று கேட்க கூடிய அளவிற்கு அவருக்கும் தனக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இனி அதற்கு அவசியம் இல்லை
இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி விரிவாக கூறும்போது ” இந்த ஆண்டைப் பொறுத்தவரை நான் சுனில் நரேனோடு ஐந்து ஆண்டுகள் விளையாடிவிட்டேன். இது எனக்கு ஆறாவது ஆண்டு. இனி நாங்கள் அதிகம் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இனி அவர் எனக்கு ஸ்பூனில் உணவு ஊட்டி விடுவது போல சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன கற்றுக் கொண்டாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் நன்றாக கவனிக்க முடியும்.
இதையும் படிங்க:திலக் வர்மா சூர்யா வேண்டாம்.. மும்பை ஜெயிக்க அந்தப் பையனை 3வது இடத்தில் அனுப்புங்க – அம்பத்தி ராயுடு அறிவுரை
நிச்சயமாக எனக்கு சந்தேகம் இருந்தால் நான் எப்போதும் அவரிடம் சென்ற நேரடியாக பேசுவேன். நான் மற்றும் சுனில் நரேன் இருவரும் இணைந்து சிறப்பாக பந்து வீசி வருகிறோம். மேலும் அவர் ஆரம்பத்தில் இருந்தே டி20 கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க வீரராக இருக்கிறார். இந்த ஆண்டும் கூட அவர் முக்கியமான விரைவாக இருப்பார்” என்று வருண் கூறி இருக்கிறார். தற்போதைய கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி சற்று முன்பு வரை ஒன்பது ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.






