திலக் வர்மா சூர்யா வேண்டாம்.. மும்பை ஜெயிக்க அந்தப் பையனை 3வது இடத்தில் அனுப்புங்க – அம்பத்தி ராயுடு அறிவுரை

0
282

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 12வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி தற்போது நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியின் பேட்டிங் வரிசை

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மும்பை அணி வலுவாக இருக்கும் நிலையில், போட்டிகளில் அந்த அணிக்கு இரண்டுமே சரியாக கை கொடுக்கவில்லை. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்னும் பார்முக்கு வராதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் களம் இறங்கி விளையாடி வரும் நிலையில், மிடில் வரிசையில் ஹர்திக் பாண்டியாவை தவிர அந்த அணிக்கு கை கொடுக்க வலுவான வீரர்கள் இல்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடு இளம் வீரர் நமன் திர் மூன்றாவது இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரை 3வது இடத்தில் அனுப்புங்க

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு உறுதியான அணியை கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் அந்த அணி நிலைமையை மாற்றுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது அவர்கள் மிகவும் வலுவான அணியை கொண்டுள்ளனர். இது அணி சேர்க்கைகளை நன்றாக செய்து சரியாக காய்களை நகர்த்துவது பற்றியதாகும். மும்பை அணி ஒருவேளை இளம் வீரர் நமன் திர்ரை மூன்றாவது இடத்திற்கு அனுப்பி ஹர்திக் பாண்டியாவை பேட்டிங் வரிசையில் மேலே அனுப்பினால் அது நன்றாக கை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:விராட் போதாது இந்த 4 பேர் விக்கெட் வேணும்.. இனி சுனில் நரைன்கிட்ட பேச மாட்டேன் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

ஹர்திக் பாண்டியாவை பொருத்தவரை அவர் ஏற்கனவே குஜராத் அணியில் தன்னை ஒரு தலைவனாக நிரூபித்துள்ளார். மேலும் வேறு ஒரு எந்த கிரிக்கெட் வீரரும் அவரை விட ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் அவர் ஒரு நம்ப முடியாத மனவலிமையை கொண்டு உள்ளார். இந்தியாவுக்காக முக்கியமான ஐசிசி போட்டிகளை வென்றுள்ளார். இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவது அவரது திறமைக்கு மற்றொரு சான்றாக இருக்கும். எனவே அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வலுவாக திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -