நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 48வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன.
இதில் கொல்கத்தா அணிக்கு மூன்றாவது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அஜின்கியா ரகானே சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்து அசத்தி இருக்கிறார்.
கொல்கத்தா டெல்லி மோதல்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் மற்றும் குர்பாஸ் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பல போட்டிகளாக துவக்கத்தில் தடுமாறி வந்த இந்த ஜோடி இந்த முறை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 2.6 ஓவர்களில் 48 ரன்கள் குவித்த நிலையில் குர்பாஸ் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சிறிது நேரத்தில் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரேன் 16 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்ததன் மூலமாக 26 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய கேப்டன் அஜின்கியா ரகானே 14 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 26 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட கொல்கத்தா அணியில் மற்ற வீரர்களான ரகுவன்சி 32 பந்துகளில் 44 ரன்கள் மற்றும் ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்கள் குவித்து டெல்லி அணிக்கு பெரிய ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறார்கள்.
சிஎஸ்கே சாதனை முறியடிப்பு
இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அஜின்கியா ரகானே இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இந்த ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் கொல்கத்தா கேப்டன் தற்போது வரை 12 சிக்சர்கள் விளாசி பவர் பிளேவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தற்போது 4வது இடத்தில் இருக்கிறார். இதில் முதல் இடத்தில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் 16 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:14 வயசுல உலகமே பாராட்டுறப்போ.. 6 வயசுல என் டீமுக்காக இதை செஞ்ச உங்களுக்கு நன்றி.. வைபவுக்கு நன்றி கூறிய லக்னோ உரிமையாளர்
இந்த ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே இதுவரை 5 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒட்டுமொத்த சிஎஸ்கேவின் சாதனையை முன்னாள் சிஎஸ்கே வீரர் முறியடித்து இருக்கிறார். இதுவரை கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில் அதில் மூன்றில் மட்டுமே வெற்றி மற்றும் ஐந்து போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு ட்ரா என புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இனி வருகிற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.