18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கேகேஆர் ராஜஸ்தான் மோதல்
கவுகாதியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் மெதுவாக காணப்பட்டதால் ராஜஸ்தான் அணியை முதலில் அழைத்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினார்கள். சில போட்டிகளுக்குப் பிறகு பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இந்த போட்டியில் தெரிந்தது. சாம்சன் 13 ரன்கள் எடுத்த நிலையில் வைபவ் அரோராவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ரியான் பராக் 25 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குள் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 29 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் வெளியேற, அதற்குப் பின்னர் களமிறங்கிய மிடில் வரிசை ஆட்டக்காரர் துருவ் ஜூரேலை தவிர மற்ற அனைவரும் வரிசையாக நடையை கட்டினார்கள். இதில் ஜூரேல் 33 ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஹசரங்கா விக்கெட் வீழ்த்தியதோடு 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டி காக் சிறப்பான ஆட்டம்
இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. இந்த முறை தொடக்க வீரராக சுனில் நரேனுக்கு பதிலாக களம் இறங்கிய அவரே தொடக்க வீரராகவும் களம் இறங்கினார். இருப்பினும் அவர் 5 ரன்னில் வெளியேற, டி காக் சிறப்பாக விளையாடி கொல்கத்தா அணியை முன்னெடுத்துச் சென்றார். கேப்டன் ரகானே 18 ரண்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹசரங்காவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:உங்கள் உடல் குப்பைத் தொட்டி அல்ல.. அதில் குப்பைகளை போடாதீர்கள்.. விராட் கோலிக்கு யுவராஜ் சிங் தந்தை அறிவுரை
மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 61 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 17 வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸர் அடித்த டி காக் அதற்கு மேல் வெற்றி இலக்கு இல்லாததால் அவரால் சதம் அடிக்க முடியாமல் போனது. இதனால் கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






