இந்திய அணியின் நட்சத்திர ஜாமான் விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோகராஜ் சிங் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி குறித்து யுவராஜ் சிங் தந்தை
இந்திய கிரிக்கெட் அணியை பொருத்தவரை மிகவும் பிட்டான விளையாட்டு வீரர் என்றால் அது விராட் கோலி தான். 2008 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியது முதல் 2025 ஆம் ஆண்டு வரை தனது உடற்தகுதியை பிட்டாக வைத்துக்கொண்டு அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். காயம் என்பது இவரது அட்டவணையில் பெரும்பாலும் அரிதாக பார்க்கக் கூடிய விஷயமாகும். ஓய்வுக்காக விராட் கோலி போட்டிகளில் இருந்து விலகி இருப்பாரே தவிர காயத்தால் விராட் கோலி விலகி இருப்பது பெரும்பாலும் அரிதான செயலாகும்.
இந்த சூழ்நிலையில் தற்போது 36 வயதாகி வரும் விராட் கோலி இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் விராட் கோலி உடற்தகுதி மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்டான கிரிக்கெட் வீரர்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “உங்கள் உடல் குப்பைத் தொட்டி அல்ல அதில் குப்பைகளை போடாதீர்கள். கண்டிப்பாக நான் சொல்வேன், விராட் கோலி தற்போது கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக இருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகும் விராட் கோலி இப்படித்தான் இருப்பார். 72 வயதிலும் விராட் கோலி பேட்டிங் செய்து சதம் அடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர் என்னை விட மிகவும் பிட்டான கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவரை நான் படித்து இருந்தால் இப்போது வரைக்கும் கிரிக்கெட் ஆடி இருப்பேன்.
இதையும் படிங்க:தோனியால எங்களுக்கு குழப்பம்தான் வருது.. இதே மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு தெரியாது – அஸ்வின் பேட்டி
அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது எண்ணங்களில் உறுதியாக இருப்பார். இரவில் தன் படுக்கை விரிப்புகளை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறிய ஒரு கூற்று எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து அதை கடந்து விடுவோம் என்று நான் கூறினேன். ஆனால் தற்போது வரை விராட் கோலி இந்திய கிரிக்கெட்காக செய்வது ஒரு அற்புதமான விஷயமாகும்” என்று அவர் கூறியிருக்கிறார்.






