10 வருடங்களுக்கான வீரரை கொல்கத்தா அணி இழந்துவிட்டது – இளம் வீரர் பற்றி விரேந்தர் சேவாக் கருத்து!

0
485

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் நேற்று கொலகாலமாக தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லின் ஜாம்பவான் அணியான சிஎஸ்கே அணியை முதல் போட்டியில் வீழ்த்தியது.

இன்று நடைபெறயிருக்கும் இரண்டாவது போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி நித்திஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி மொகாலி நகரில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த முறை முற்றிலும் மாறுபட்ட புதுமையான அணியுடன் களமிறங்குகிறது. அந்த அணிக்கு புதிய கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த முறை நிச்சயமாக பிளே ஆஃப் சுற்று நோக்கி பயணிக்க இருப்பதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக ஆடும் கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி தொடர்களிலும் இறுதி போட்டி வரை தகுதி பெற்றது. கடந்த சீசனில் அந்த அணி சரியான துவக்கத்தை பெற்றிருந்தாலும் போட்டித் தொடரின் மையப்பகுதியில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த முறை நிச்சயமாக ஒரு வெற்றியை நோக்கி பயணத்தை துவங்க இருக்கிறது கே.கே.ஆர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செய்த மிகப்பெரிய தவறு ஒன்றை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது பற்றி பேசி இருக்கும் அவர் சுப்மன் கில் போன்ற வீரரை அந்த அணியின் நிர்வாகம் தக்க வைத்திருக்க வேண்டும். அவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆட்டக்காரரை வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார் சேவாக்.

- Advertisement -

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் “கொல்கத்தா அணியில் சுப்மன் கில் பட்டை தீட்டப்படாத வைரமாக இருந்தார். இதே போன்று தான் 2008 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக ஆர்சி பி அணியில் விராட் கோலி இருந்தார். சுப்மன் கில் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு கொல்கத்தா அணிக்காக ஆடு இருக்கக்கூடிய ஒரு வீரர். நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்திருந்தால் நிச்சயமாக அவரை வெளியேற அனுமதித்திருக்க மாட்டேன். இது அவர்களால் எடுக்கப்பட்ட மிகவும் ஒரு தவறான முடிவு” என தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.