எதிர் டீம்க்கு என்ன செய்யனும்னு கம்பீருக்கு தெரியும்.. கம்மின்ஸ்க்கு ஸ்ரேயாஸ் ஐயர் பதிலடி

0
414
Shreyas

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு பக்கத்தில் இருந்தும் கேப்டன்கள் மிக சூடான அறிக்கைகளை கொடுத்து வருகிறார்கள்.

இந்த ஐபிஎல் சீசனில் லீக் மற்றும் நாக் அவுட் என இரண்டு முறை மோதிய பொழுதும் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. லீக் போட்டியில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பில் இருந்து கொல்கத்தா அணி தோல்வி அடையும் நிலைக்கு வந்து இறுதியில் வெற்றி பெற்றது. ஆனால் நாக் அவுட் சுற்றில் ஹைதராபாத் அணியை எந்த சிரமமும் இல்லாமல் வீழ்த்தியது.

- Advertisement -

மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் கொல்கத்தா அணி பலமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களே வெற்றி பெறுவார்கள் என பலரும் கூறி வருகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கடந்த போட்டிகளைப் போல இருக்காது எனவும், இறுதிப் போட்டிக்காகவே தங்களது வீரர்கள் ஆற்றலை சேமித்து வைத்திருக்கிறார்கள் எனவும் நேரடியாகவே கொல்கத்தா அணிக்கு சவால் விட்டு பேசி இருந்தார்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்பொழுது “ஹைப்பை பொறுத்தவரை அது மீடியாக்களால் உங்களால் உருவாக்கப்படுகிறது. நான் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறேன் என்பது கூட நீங்கள் உருவாக்குவதுதான். ஆனால் கம்பீர் பாயை பற்றி பேசும்பொழுது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதில் அவருக்கு அபார அறிவு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க :இங்கிலாந்து டி20 உ.கோ-க்கு ரெடியாக.. பாகிஸ்தான் கூட ஆடறதுக்கு.. ஐபிஎல் ஆடறது பெட்டர் – மைக்கேல் வாகன் பேச்சு

அவர் கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாக இருக்கிறார். அவருடைய யுத்திகள் மிகவும் சிறப்பானது. எங்கள் எதிர் அணிக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில், அவருடைய பங்கு பெரிய அளவில் இருக்கிறது. அதே வேகத்தை நாங்கள் இறுதிப் போட்டியிலும் தொடர்வோம்” என்று கூறியிருக்கிறார்.