இங்கிலாந்து டி20 உ.கோ-க்கு ரெடியாக.. பாகிஸ்தான் கூட ஆடறதுக்கு.. ஐபிஎல் ஆடறது பெட்டர் – மைக்கேல் வாகன் பேச்சு

0
545
Vaughan

தற்பொழுது பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணிவுடனான உள்நாட்டில் இந்த டி20 தொடரில் விளையாடுவதற்காக, டி20 உலக கோப்பை இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றிருந்த எல்லா வீரர்களும் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறினார்கள். இது ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா, அணிக்கு பெரிய பாதிப்பை உருவாக்கியது.

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், பெங்களூரு அணிக்கு மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வில் ஜேக்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக விளையாடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் ஆகியோர் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பெட்ல இல்லாததற்கான விலையை நாக் அவுட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அந்த அணி கொடுத்திருக்கிறது. இதே போல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வில் ஜேக்ஸ் இல்லாமல், அவருடைய இடத்தில் மேக்ஸ்வெல் விளையாடி மோசமாக சொதப்பியதற்கான விலையை பெங்களூரு அணியும் கொடுத்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்களது எல்லா வீரர்களையும் திரும்ப நாட்டிற்கு ஐபிஎல் தொடரிலிருந்து அழைத்துக் கொண்டதன் மூலம் ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டார்கள். குறிப்பாக ஜோஸ் பட்லர், பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் மூவரும் பெரிய போட்டிகளில் விளையாட இருந்தார்கள். அதன் அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு மிகப்பெரியது. பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகள் விளையாடுவதை விட, ஐபிஎல் விளையாடுவது டி20 உலகக் கோப்பை சிறந்த தயாரிப்பாக இருந்திருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா உடன் அமெரிக்கா புறப்படாத கோலி.. போட்டியை தவறவிடும் வாய்ப்பு.. என்ன நடக்கிறது?

ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் அணி உரிமையாளர்கள் வீரர்கள் மற்றும் எல்லோரும் பெரிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மிகப்பெரியது என்று நான் உணர்கிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் விளையாட முடியாவிட்டாலும் பின் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் இருவரும் விளையாடு இருக்கலாம். மேலும் இந்த இருவரும் ஐபிஎல் தொடர்கள் விளையாடுவதற்கு தயாராகவே இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.