“கோலி நேற்று மாதிரி பேட்டிங் எப்பவும் செய்ய மாட்டார்.. ஆனா அதுக்கு காரணம் இருக்கு” – ரோகித் சர்மா விளக்கம்

0
844
Rohit

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாகப் கைப்பற்றிய பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி 22 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து, மிகவும் நெருக்கடியான நேரத்தில் இருந்த பொழுது கூட, இந்திய அணி அதிரடியாக விளையாடும் இன்டென்ட்டை கைவிடாமல் விளையாடி 212 ரன்கள் குவித்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரி இல்லை சிக்ஸருக்கு அடிப்பதற்கு புல் ஷாட் விளையாடி, கேட்ச் கொடுத்து, கோல்டன் டக் அடித்து ஆட்டம் இழந்தார்கள்.

இதில் விராட் கோலி மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன், அவர் ஆடுகளத்தின் தன்மையை உணராமல் அப்படி விளையாடி ஆட்டம் இழந்து விட்டார் என்று, இந்தியா பேட்டிங் செய்த பொழுது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் இருந்தது.

மேலும் சஞ்சு சாம்சனுக்கு முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு தரப்படாமல் மூன்றாவது போட்டியில்தான் வாய்ப்பு தரப்பட்டது. இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை வெகு சீக்கிரத்தில் எழுந்திருந்த பொழுது, சஞ்சு சாம்சன் அப்படி ஒரு ஷாட் விளையாடி இருக்கக் கூடாது என்று அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்று போட்டியின் முடிவுக்கு பின்னால் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, அவர்கள் அப்படி விளையாடியதற்குப் பின்பு இருந்த நோக்கம் என்னவென்று விளக்கமாகக் கூறி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது “வீரர்கள் எந்த இடத்தில் விளையாட வேண்டும்? அவர்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட் முறையைப் பற்றிதான் நாங்கள் தெளிவுபடுத்த முடியும். அவர்கள் மைதானத்திற்கு வரும் பொழுது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

நேற்று விராட் கோலியை பார்த்தது போல் அவர் முதல் பந்தில் இருந்தே அவ்வளவு கடினமாக அடிக்க செல்ல மாட்டார். ஆனால் அவர் அந்த அட்டாக்கிங் இன்டென்ட்டை காட்டினார்.

சாம்சனும் முதல் பந்தியிலேயே ஆட்டம் இழந்தார். ஆனால் அவரிடமும் அடித்து விளையாட வேண்டும் என்கின்ற இன்டெண்ட் இருந்தது. இதுதான் நேற்றைய போட்டியில் அவர்கள் ஆட்டம் இழந்ததற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.