சச்சினை தாண்டி கோலி மோசமான சாதனை.. T20i கிரிக்கெட் வரலாற்றில் அவருக்கு முதல் முறை

0
97
Virat

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் சிறிய மைதானம் மற்றும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான பெங்களூர் ஆடுகளம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய ரன் டோட்டலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஆடுகளம் இரட்டை வேகம் கொண்ட ஆடுகளம். சில பந்துகள் வேகமாகவும், சில பந்துகள் மெதுவாகவும் வருகிறது. மேலும் பந்து திரும்புகிறது.

இதன் காரணமாக டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபமான வேலையாக இருக்கவில்லை. மேலும் இன்டெண்ட் காட்டி விளையாடுவது என்கின்ற முடிவினால், விக்கெட்டை தாராளமாக தாரை பார்த்தார்கள்.

இந்த நிலையில் முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வால் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும் அடுத்து வந்த விராட் கோலி ரன்கள் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கடுத்து சிவம் துபே ஒருவன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததும், இன்று விளையாட வாய்ப்பு பெற்ற சஞ்சீவ் சாம்சன் ரன்கள் ஏதும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.

இன்று விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த காரணத்தினால், பேட்டிங் வரிசையில் முதல் ஏழு இடங்களில் வரக்கூடிய பேட்ஸ்மேன்களில், இந்திய அணியில் அதிக முறை டக் அவுட் ஆனவர் என்கின்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் கோல்டன் டக் ஆவது இதுவே முதல் முறை.

விராட் கோலி – 35
சச்சின் டெண்டுல்கர் – 34
ரோகித் சர்மா – 33
வீரேந்திர சேவாக் – 31