திடீரென இந்தியா திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?.. ருத்ராஜ் ரூல்ட் அவுட்.. காரணம் என்ன?

0
761
Virat

இந்திய அணி டிசம்பர் 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரி மைதானத்தில் அந்த அணியை எதிர்த்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த முறை இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடந்த முறைகளில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பும்ரா ஆகியோர் இந்த தொடருக்குத்தான் திரும்ப இருக்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. எனவே இப்படியான காரணங்களால் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு மட்டும் தனித்த முக்கியத்துவம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி திடீரென தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

- Advertisement -

மேலும் அவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்கின்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பிசிசிஐ “செஞ்சூரியனில் நடக்க இருக்கும் முதல் போட்டிக்கு முன்பாக விராட் கோலி தென் ஆப்பிரிக்கா திரும்பி விடுவார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” என்று கூறியுள்ளது.

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் மூன்று தொடர்களுக்குமான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ருத்ராஜ், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விரலில் காயம் அடைந்தார். இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. மேலும் அவர் இந்திய டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். தற்பொழுது அவர் பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!