“கோலி ரோகித்த இந்த வீரர் நெருங்கிட்டாரு.. தப்பு சொல்ல முடியாது!” – தினேஷ் கார்த்திக் திட்டவட்ட பேச்சு!

0
1959
Gill

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆசியக் கோப்பையில் தோல்வி அடைந்திருக்கிறது. அணியில் ஒரு வீரர் சதம் அடித்தும், பேட்டிங் வரிசை ஒன்பதாவது இடம் வரை இருந்தும், 265 ரன்களை எட்ட முடியாதது, இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மிக முக்கியமாக நேற்றைய போட்டியில் விளையாடிய வீரர்கள் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்கள், மற்றும் மாற்று வீரர்களாக அணியில் தொடர்வார்கள். அதாவது சிலர் விளையாடும் வாய்ப்பு பெறுவார்கள் சிலர் விளையாடும் வாய்ப்பில் இருப்பார்கள்.

- Advertisement -

மேலும் நேற்றைய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக மெதுவாக இருந்தது. இப்படியான ஆடுகளங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக ஆட்டத்தை நகர்த்தி சென்று விளையாட வேண்டும். அதிரடியாக விளையாட முடியாது. குறிப்பாக புதிதாக வரும் பேட்ஸ்மேன்களால் முடியாது.

தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக நீண்ட தொடராகவும். இதற்கு அமைக்கப்படும் ஆடுகளங்கள் ஆரம்பத்தில் சராசரியாக இருந்தாலும், போகப் போக வேகம் குறைந்து மெதுவாக மாறிவிடும்.

எனவே உலகக்கோப்பையில் நேற்றைய மாதிரியான மெதுவான ஆடுகளங்களில், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு இருக்கும் வீரர்கள் மலிவாக ஆட்டம் இழந்தது கவலை அளிக்கும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் அவசரப்பட்டு ஒரு ஷாட் விளையாட போட்டியை தோற்கும் அளவுக்கு ஆகிவிட்டது. அவர் கடினப்பட்டு அடித்த சதத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து அவரே வருத்தமும் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கில் பற்றி பேசி உள்ள தினேஷ் கார்த்திக் “ஆம் நிச்சயமாக கில் ஆட்டத்தை முடிக்க விரும்பக் கூடியவர். நான் அவர் அடித்த அந்த ஷாட்டை தவறான ஒன்றாக நினைக்கவில்லை. இந்த மாதிரியான ஆடுகளங்களில், தொடர்ச்சியாக இப்படியான ஷாட்கள் விளையாடுவது கடினமான ஒன்று.

அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான வீரராக மாறிவிட்டார். அவர் தற்பொழுது ஒரு பகுதியை மட்டும் செய்ய வேண்டியது இருக்கிறது. அது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போல் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக்கூடிய பகுதி. நிச்சயம் அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. எனவே அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுப்பார்!” என்று கூறியிருக்கிறார்!