வீடியோ: “முறைத்த விராட் கோலி.. ஒரு நிமிடம் பயந்துபோன ரிஷப் பண்ட்” – கொஞ்சம் விட்ருந்தா ஆளையே காலி பண்ணிருப்பான்!

0
3690

விராட் கோலி-ரிஷப் பண்ட் இடையே நடந்த சலசலப்பில் விக்கெட் இழக்க தெரிந்த விராட்கோலி ரிஷப் பண்டை பார்த்து முறைத்த காட்சி வைரலாகி வருகிறது.

டாக்கா மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளையும், உனட்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனை தொடர்ந்து முதலாவது இன்னிசை விளையாடியது. முதல் நாள் முடிவில் 19 ரன்கள் அடித்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் 10 ரன்களுக்கு அவுட்டானார்.

மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்கள் அடித்திருந்தபோது, தஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த புஜாரா 24 ரன்களுக்கு அதே தஜுல் இஸ்லாம் பந்தில் அவுட்டானார்.

உணவு இடைவேளைக்கு முன்பு , கடைசி ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி பந்தை லெக் திசையில் அடித்து சிங்கிள் எடுக்க முயற்சித்தார். கிட்டத்தட்ட மறுதிசை வரை சென்றுவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் இறுதிவரை கிரீஸ் விட்டு வெளியே வரவில்லை. மீண்டும் பேட்ஸ்மேன் சைடிற்கு ஓடி ரன்-அவுட்டில் இருந்து தப்பித்துக்கொண்டார். அப்பது சில வினாடிகள் பண்ட்டை முறைத்து பார்த்தார் விராட் கோலி. அதற்கு ரிஷப் பண்ட் முழிபிதுங்கியவாறு ரியாக்ட் செய்தது வைரலாகியுள்ளது.

- Advertisement -

உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய விராட் கோலி, 24 ரன்களுக்கு தஸ்கின் அகமது பந்தில் வெளியேறினார். பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் – பண்ட் இருவரும் விக்கெட் விடாமல் அரைசதம் அடித்தனர்.

தேநீர் இடைவேளையின்பொது, பண்ட் 86*, ஷ்ரேயாஸ் 58* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா 226/4 என்ற நிலையில் உள்ளது.