மாஸா பாராட்டிய கோலி.. பதிலுக்கு மேக்ஸ்வெல் திருப்பி செய்த காரியம்.. சோசியல் மீடியாவில் சுவாரசியமான சம்பவம்!

0
65392
Virat

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம், இன்று கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

மிக முக்கியமாக இந்த இரட்டைச் சதம் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது வந்திருக்கிறது. மேலும் இதுவரை இரட்டை சதம் அடித்தவர்கள் எல்லோருமே துவக்க ஆட்டக்காரர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் மேக்ஸ்வெல் இதையெல்லாம் தாண்டி வந்து, மேலும் அசையவே முடியாத அளவிற்கு தசைப்பிடிப்பையும் வைத்துக்கொண்டு, 128 ரன்கள் 201 ரன்கள் குவித்து அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இந்த இரட்டை சதத்திற்குள் இத்தனை விஷயங்கள் இருக்கின்ற காரணத்தினால், மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டம் கிரிக்கெட் உலகில் எல்லோராலும் மிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று இது குறித்து கூறி இருக்கும் பொழுது ” என்னுடைய வாழ்நாளில் நான் இப்படிப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸை பார்த்ததில்லை” என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் அற்புதமான ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து விளையாடி வரும் விராட் கோலி தன்னுடைய ஐபிஎல் அணியின் சக வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இன்ஸ்டாகிராமில் ” இதை செய்வதாக இருந்தால் உங்களால் மட்டுமே செய்ய முடியும்!” என்பதாகக் கூறி ஒரு ஸ்டோரி வைத்திருந்தார்.

கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸை வைத்து ஒப்பிட்டு மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சமூக வலைதளத்தில் பாராட்டி இருந்தது.

இதற்கு அடுத்து மேக்ஸ்வெல் நேற்று விராட் கோலியையும் தன்னையும் வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியிட்ட பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவேற்றி இருக்கிறார். விராட் கோலி தன்னை பாராட்டியதற்கு, திருப்பி நட்பை காட்டும் விதமாக அவர் இதைச் செய்திருக்கிறார்!

- Advertisement -