கோலியா பாபரா? பும்ராவா ஷாஹின் அப்ரிடியா? – வாசிம் அக்ரம் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியான பதில்!

0
3401
Wasim

தற்கால கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவரால் வடிவத்திற்கு ஏற்றார் போல் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள முடிகிறது!

மிகக் குறிப்பாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் யாரையும் விட மிக முன்னணியில் இருக்கிறார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 49 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்தில் அந்த சாதனையை முறியடிக்க கூடிய மிக அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறார்.

இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக சீராக ரன்களை குவித்து வருகிறார். இதன் காரணமாக அவர் விராட் கோலி உடன் ஒப்பிடப்படுகிறார்.

மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு தலைவராக பும்ரா இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சில் அவரது முத்திரை தனியாக இருக்கிறது. இதே போலானவராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அப்ரிடி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சு லெஜன்ட் வாசிம் அக்ரமிடம் இந்த நான்கு வீரர்களில் எந்த இரண்டு வீரர்களை தேர்ந்தெடுப்பிர்கள் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒளிவு மறைவு இல்லாமல் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “விராட் கோலியா பாபர் ஆசமா என்று தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானது. இதனால்தான் நான் தேர்வாளராகவே இல்லை. ஆனால் நான் நிச்சயமாக விராட் கோலியை பாபர் ஆஸமை விட முன்வைத்து தேர்வு செய்வேன். பாபர் எந்த சந்தேகமும் இல்லாமல் நவீன கிரிக்கெட்டின் சாம்பியன் வீரர். ஆனால் அவர் இன்னும் சிறிது காலம் பயணிக்க வேண்டும். இதில் விராட் கோலி நிறைய சாதித்து இருக்கிறார்.

அதே பும்ராவா ஷாகினா என்று கேட்டால் நான் ஷாகினை தேர்ந்தெடுப்பேன். ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளராக அவர் ஸ்டார்க்கை ஞாபகப்படுத்துகிறார். இவர்கள் இருவரும் பந்தை புல் லென்த்தில் வீசுகிறார்கள். நேராக விக்கெட் எடுக்கப் போகிறார்கள். இதுதான் இவர்களிடம் எனக்கு பிடித்த விஷயம். மேலும் ஷாகின் 9 மற்றும் 10வது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு தன்னுடைய பேட்டிங்கை மேம்படுத்தி இருக்கிறார். அவரால் உள்ளே வந்து இரண்டு சிக்ஸர்கள் அடிக்க முடியும். இதனால்தான் ஷாகினை நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!