“கோலிய விடுங்க.. ரோகித் இது ரொம்ப ஈசி விட்றாதிங்க!” – பாக் சல்மான் பட் பரபரப்பு கருத்து!

0
2381
Rohit

உலகக் கிரிக்கெட் மிக வேகமாக மாறி வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் இங்கிலாந்து முதன் முதலில் தன்னை மாற்றிக் கொண்டது. மூன்று வடிவத்திற்கும் மூன்று அணிகளை தயார் செய்வதில் இங்கிலாந்து அணி ஏறக்குறைய முழுமை அடைந்திருக்கிறது என்று கூறலாம்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா இந்த வழியில் மிக வேகமாக பயணிக்கிறது. அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை நிறைய உள்ளே கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ஆல்ரவுண்டர்களை அவர்கள் நிறைய தேடுகிறார்கள்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் ஆக இருந்து வரும் இந்தியா இதற்கு கொஞ்சம் தாமதமாகவே வந்திருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு தனி அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை தோற்ற உடனே, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர்களைக் கொண்ட டி20 அணியை உருவாக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று உலகக் கோப்பையை இழந்ததும், ரோகித் சர்மா இல்லை பந்து கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி இதுவரை எதுவும் கூறவில்லை. மேலும் இதை அவர்களின் முடிவுக்கே விடுவதாக பிசிசிஐ கூறி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இதுவெல்லாம் சேர்ந்து ரோகித் மற்றும் விராட் கோலியின் சர்வதேச டி20 கிரிக்கெட் எதிர்காலம் பற்றி நிறைய சலசலப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் கூறும் பொழுது “விராட் கோலியின் உடல் தகுதி மற்றும் அவர் விளையாட்டுக்கு கொடுக்கும் அர்ப்பணிப்பு என்று பார்க்கும் பொழுது, அவர் அடுத்த நான்கு வருடம் விளையாட முடியாமல் போவதற்கான எந்தக் காரணங்களும் தெரியவில்லை. அவரது உடற் தகுதி மற்றும் தீவிரத்தால் அவரால் 38 வயதிலும் விளையாட முடியும்.

ரோகித் சர்மா யாருடனும் ஒப்பிட முடியாத வீரர். இருப்பினும் அவர் நீண்ட நாட்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் செலவு செய்து விட்டதால், இறுதியாக அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கிரிக்கெட் வடிவங்களை விட டி20 கிரிக்கெட் வடிவம் மிகவும் எளிமையானது. எனவே அவர் இந்த வடிவத்தை தாராளமாக தொடர வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!