கோலி கேஎல்.ராகுல் அதிரடி அரைசதம்.. பாபர் அசாம் தொடர்ந்து செய்யும் தவறு.. பரபரப்பாகும் ஆசிய கோப்பை!

0
1052
ICT

இந்தியா பாகிஸ்தான் அணிகள் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதிக்கொண்ட, ஆசிய கோப்பையின் இரண்டாவது சுற்று போட்டி நேற்று மழையால் நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே.

இந்த நிலையில் இன்று மழை நின்று, மாலை 4:40 மணிக்கு போட்டி துவங்கியது. நேற்று களத்தில் நின்ற விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும், 24.1 ஓவரில் இருந்து துவங்கி ஆட ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இன்றைய போட்டியில் முதுகுப் பிடிப்பின் காரணமாக பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ரன்களை கொடுத்து இருந்த பாகிஸ்தான் அணிக்கு இது முக்கிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இன்று கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி அனுபவம் இல்லாமை தெளிவாகக் களத்தில் வெளிப்பட்டது. பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமான சூழ்நிலையில் அவர் ஸ்லிப் வைக்கவில்லை. மேலும் ஆரம்ப கட்டத்தில் நான்கு ஓவர்களுக்கு, அணியின் பிரதான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் முடிவில் இல்லை.

இந்த நிலையில் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பாகிஸ்தான் அணி தந்த சாதகமான நிலைமைகளை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கும் கே.எல்.ராகுல் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சதாப் கான் மற்றும் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் இப்திகார் அஹமத் இருவரையும் குறி வைத்து தாக்கினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில் இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதைத்தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலியும் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஒட்டு மொத்தமாக இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடித்து பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தற்போதைக்கு இதுதான் நல்ல விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது!