கோலி முதல் இடத்தில் கிடையாது.. யோ யோ டெஸ்ட் பிட்னஸில் இந்த இந்திய வீரர்தான் டாப்!

0
7273
Virat

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது!

தற்பொழுது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலூரில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது!

- Advertisement -

மேலும் இந்தப் பயிற்சி முகாமில் வீரர்களுக்கு யோயோ டெஸ்ட் என்ற உடல் தகுதி டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. பிசிசிஐ நேற்று யோயோ டெஸ்டில் வீரர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வெளியில் தெரியக்கூடாது. அது ஒப்பந்தத்தை மீறுவது என்று கூறியிருந்தது.

நேற்று முன்தினம் விராட் கோலி யோயோ டெஸ்ட் முடிந்ததும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் யோ யோ டெஸ்ட் மதிப்பெண் 17.2 என்று வெளியிட்டு மகிழ்ச்சி என்று கூறியிருந்தார். இதை வாய்மொழியாக கண்டித்த பிசிசிஐ அனைத்து இந்திய வீரர்களுக்கும் இனி இப்படியான தகவல்களை பகிரக் கூடாது என்று கூறியது.

யோ யோ டெஸ்ட் என்பது இரண்டு போட்டிகளுக்கு நடுவில் விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு கட்டாயம் நேஷனல் கிரிக்கெட் அகாடமி மற்றும் விளையாட்டு அறிவியல் குழு இரண்டும் சேர்ந்து நடத்துகிறது.

- Advertisement -

இதுகுறித்து பிடிஐ செய்தி குறிப்பில் வந்திருப்பதாவது “வீரர்களுக்கு இரண்டு போட்டிகள் இடையில் இடைவெளி இருந்தால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் விளையாட்டு அறிவியல் குழு இந்திய அணி ஊழியர்களுடன் சேர்ந்து அனைத்து கட்டாய சோதனைகளையும் செய்து வருகிறது. இப்போது சுப்மன் கில் இதில் இந்திய வீரர்களில் மிக அதிகபட்சமாக 18.7 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். பெரும்பாலான இந்திய வீரர்கள் பதினாறு புள்ளி ஐந்து முதல் 18 வரை மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இப்படியான விபரங்கள் எதுவும் வெளியில் கசியவே கூடாது. அது ஒப்பந்தத்தை மீறுகின்ற செயல். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை வேண்டுமானால் தாராளமாக பதிவேற்றிக் கொள்ளலாம். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மிக கண்டிப்பாக பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு தெரிவித்து இருந்தது. ஆனாலும் பயிற்சி முகாமில் இருந்து செய்திகள் கசிந்து இருக்கின்றன!