கோலி பாகிஸ்தான் வீரர் மியான்தத் மாதிரி.. சச்சின்தான் பெஸ்ட்.. வெஸ்ட் இண்டிஸ் லெஜெண்ட் அதிரடி பேட்டி!

0
294
Viratkohli

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்போது விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு 500 ஆவது சர்வதேச போட்டியாகும்!

இந்தியாவில் 500 சர்வதேச போட்டிகளை விளையாடியவர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு விராட் கோலி இணைந்து இருக்கிறார். அவர் இன்னும் அதிகப்படியான போட்டிகள் விளையாடுவார் என்பதும் உறுதி.

- Advertisement -

இந்த நிலையில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பொழுது ரன்கள், சராசரி, ஸ்ட்ரைக்ரேட் என்று எல்லா விதத்திலும் சச்சினை விட விராட் கோலி மிக அதிகமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 519 விக்கெட்டுகளை வீழ்த்திய லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் சச்சினையும் விராட் கோலியும் ஒப்பிட்டு தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்திய ஜாம்பவான் என்கின்ற முறையில் விராட் கோலியை நான் சச்சினுக்கு பின்னால்தான் மதிப்பிடுவேன். நான் பார்த்த மற்றும் விளையாடிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சினும் ஒருவர்.

- Advertisement -

பிரைன் லாரா மற்றும் ரிச்சர்ட்ஸ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சிறந்த வீரர்கள். அதேபோல் நான் இளமையில் விளையாடிய பொழுது ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் இருவரும் ஆஸ்திரேலியாவில் சிறந்த வீரர்கள். இங்கிலாந்துக்கு கிரஹாம் கூச் பாகிஸ்தானுக்கு ஜாவித் மியான்தத் போன்றவர்கள் இருந்தார்கள்.

இவர்கள் தங்களது விக்கெட்டுக்கு என்ன மாதிரியான மதிப்பைக் கொண்டு இருந்தார்களோ, அதேபோல் விராட் கோலியும் தன்னுடைய விக்கட்டுக்கு மதிப்பை கொண்டிருக்கிறார். அவர் தனது விக்கட்டை அவ்வளவு எளிதில் தர மாட்டார். எனவே நான் பார்த்த நான்கு மற்றும் ஐந்து சிறந்த வீரர்களில் விராட் கோலியையும் கட்டாயம் சேர்ப்பேன்.

நான் வெஸ்ட் இண்டீஸ் தேர்வாளராகவும் அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது, நாங்கள் உரையாடியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவருக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளது. அவர் விளையாட்டில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.

அவர் தன்னை உயர்த்திக் கொள்ள, யாரிடமிருந்து எந்த ஆலோசனையும் பெற தயாராக இருந்தார். அவருடைய சாதனைகள் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவருக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் மிகச் சிறந்த வீரர்களில் மூன்று முதல் ஐந்து இடங்களில் தன்னை தக்க வைக்கும் முனைப்பு இதுவெல்லாம் அவரை எல்லாவற்றையும் செய்ய வைக்கும்!” என்று கூறியிருக்கிறார்!