“பும்ரா அஸ்வின் கிடையாது.. எங்களுக்கு சவாலா இருக்க போறது இந்த இந்திய வீரர்தான்” – பவுமா பேச்சு

0
8409
Bumrah

நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் முடிந்து, இன்றைய தினம் சில கிரிக்கெட் நாடுகளில், மைதானங்களுக்கு கொண்டாட்டங்கள் மாற்றப்படும். அதாவது அடுத்த நாள் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும்.

இந்த வருடம் இன்றைய நாளில் வழக்கம்போல் ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஆனால் விரும்பத் தகாத வகையில் தற்பொழுது அங்கு மழை குறுக்கிட்டு இருக்கிறது.

- Advertisement -

அடுத்து இன்று இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் தென் ஆப்பிரிக்காவில் மோத இருக்கின்றன. இந்த போட்டியிலும் மழை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை வென்றால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எளிதாக இருக்கும்.

இதைவிட மிக முக்கியமாக உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளை வெல்ல வேண்டிய அவசியம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறது. எனவே இந்திய அணியை விட தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதன் காரணமாக இந்தத் தொடருக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உருவாகி இருக்கிறது. மேலும் 31 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்கின்ற வரலாறும் இந்த தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்றுகிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பேசும்பொழுது “விராட் கோலி இந்திய பேட்டிங் வரிசையில் இருந்து எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால். அவரைப் போன்ற ஒரு வீரரை உங்களால் எப்பொழுதும் ஒதுக்கவே முடியாது. அவர் இங்கு நிறைய முறை விளையாடி இருக்கிறார். அவருக்கு இங்கு உள்ள நிலைமைகள் நன்றாக தெரியும்!” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ரபாடா விராட் கோலி பற்றி கூறும் பொழுது “அவர் எப்பொழுதும் சிறந்த வீரர்களுக்கும் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடக்கூடிய சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக அவர் ஒரு சில சிறந்த வெற்றிகளை பெற்றிருக்கிறார்!” என்று கூறி இருக்கிறார்