கோலி இப்போ ஒரு செம மாற்றத்தை பேட்டிங்கில பண்ணியிருக்கார்.. இனி பெருசா ரன் வரும் – இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் மாஸ் இன்ஃபர்மேஷன்!

0
795
Virat

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி அறியப்படுகிறார். அவருடன் ஒப்பிட்டு சில பேட்ஸ்மேன்களை கூறினாலும், இவர் மட்டுமே மூன்று வடிவத்திலும் வெற்றிகரமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார்!

இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனா காலத்தில் இரண்டு வருடங்கள் பேட்டிங்கில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. சதங்கள் குறைந்து அடுத்து அரை சதங்களும் நின்று பெரிய வறட்சி உண்டானது. இது இவருடைய கிரிக்கெட் காலத்தில் மிகப்பெரிய கடினமான காலக்கட்டம் ஆகும்.

- Advertisement -

இந்த காலக்கட்டத்தில் சுழற் பந்துவீச்சில் குறிப்பாக, உடலுக்கு வெளியே திரும்பும் சுழற் பந்து வீச்சில் இவருக்கு பலவீனம் இருப்பதாக கணிக்கப்பட்டது. இவரும் பலமுறை அப்படியான பந்து வீச்சுக்கு தன் விக்கெட்டை கொடுத்தபடியே இருந்தார்.

இந்த நிலையில் ஒரு மாத காலம் ஓய்வுக்கு போய் வந்து கடந்த முறை நடைபெற்ற ஆசிய கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து தன்னுடைய சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்குப் பிறகு இவரது பேட்டில் இருந்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான முறையில் ரன்கள் எப்பொழுதும் போல் வர ஆரம்பித்துவிட்டது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் சர்வதேச சதங்களை அடித்தார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்தார்.

- Advertisement -

தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், இந்திய அணிக்கும் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பாங்கர் விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு பேட்டிங்கில் செய்துள்ள ஒரு முக்கிய மாற்றம் பற்றி விரிவாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நான் பார்த்த நேரங்களில் விராட் கோலி மிட் விக்கெட் திசையை குறி வைத்து விளையாடுவது தெரிந்தது. அவர் அதில் சில பெரிய ஷாட்கள் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் விளையாடுகிறார். விராட் கோலி அடிக்கடி ஸ்வீப் விளையாட மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இதை வைத்து அதற்கு ஏற்றபடி பீல்ட் செட் செய்யப்படுகிறது. இதற்காக அவர் கிரீசை பயன்படுத்தி, உள்ளே தள்ளி நின்று பேக் புட்டில் ஷாட்களை விளையாடினார்.

விராட் கோலி சமீப காலமாக தனது கால்களை நன்றாக பயன்படுத்துகிறார். இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. இடைப்பட்ட ஒரு காலத்தில் அவர் ஹை மற்றும் ப்ரி பேட் லிப்ட்டுடன்
விளையாடினார். இப்பொழுது பந்தை விளையாடுவதற்கு முன்பு பேட்டை கீழே தட்டி விட்டு விளையாடுகிறார். இது மிகவும் உதவியாக உள்ளது. பந்தின் லென்த்தை தீர்மானிக்க இது வசதியாக இருக்கிறது. எனவே அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக மாறி இருக்கிறது! என்று கூறியிருக்கிறார்!